இனிமே அட்வைஸ் கிடையாது.. டோலிவுட்டில் வில்லனாகும் சமுத்திரகனி!

சாட்டை, அப்பா என பல படங்களில் அறிவுரை சொல்லி நடித்து வந்த இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி, அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக களமிறங்குகிறார்.

ஐதராபாத்: சுப்ரமணியபுரம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் சமுத்திரகனி.

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் சமுத்திரகனி, அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

பாலசந்தரின் உதவி இயக்குநராக இருந்த சமுத்திரகனி, நாடோடிகள் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றிபெற்றார்.

அட்வைஸ் அப்பா

அட்வைஸ் அப்பா

சாட்டை, அப்பா, தொண்டன், விஐபி என சமுத்திரகனி நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் அட்வைஸ் செய்யும் அப்பா கதாபாத்திரத்திலே நடித்து வந்தார். இதனால், அவரை அட்வைஸ் அப்பா என்றே செல்ல பெயர் வைத்து கோலிவுட்டில் அழைத்து வருகின்றனர். சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பள்ளிகளிலும் அவரை சிறப்புரை ஆற்ற அழைத்தது எல்லாம் தனிக்கதை.

தேசிய விருது

தேசிய விருது

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகர் பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. சுப்ரமணியபுரம், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, அப்பா, காலா, காப்பான் என பல படங்களில் தனது முத்திரையான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்

நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் கால் வைத்த சமுத்திரகனிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இயக்குநர் விஜயனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சமுத்திரகனியின் கடின உழைப்பை பார்த்த பாலசந்தர், அவர் இயக்கிய 100வது படமான பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குநராக சமுத்திரகனியை சேர்த்துக் கொண்டார்.

மேலும், பாலசந்தர் இயக்கிய அண்ணி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சமுத்திரகனி, 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார். ஆனால், 2009ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம் தான் அவரை வெற்றி இயக்குநராக மாற்றியது.

வில்லன்

வில்லன்

சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு நெகட்டிவ் ரோல்களை விடுத்து ஹீரோவாகவும், அப்பா உள்ளிட்ட குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வந்த சமுத்திரகனி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ராஜமவுலி படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் சமுத்திரகனி, அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ஆமு வைகுந்தபுரமுலோவி படத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X