புத்தாண்டில் ஆலியா – ரன்பீர் நிச்சயதார்த்தமா? அதுக்குத்தான் அந்த இடத்துக்கு போனாங்களா.. உண்மை என்ன?

மும்பை: பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் நிச்சயதார்த்தம் வரும் புத்தாண்டு அன்று நடைபெறப் போவதாக தகவல் பரவி பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் குடும்பத்துடன் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ரந்தம்பூருக்கு சென்ற நிலையில், நிச்சயம் செய்து கொள்ளத்தான் சென்றுள்ளார்கள் என தகவல் பரவி வருகிறது.

ஆனால், நிச்சயம் செய்து கொள்ள போகவில்லை சுற்றுலாவுக்குத் தான் சென்றுள்ளனர் என மாமா ரந்தீர் கபூர் திட்டவட்டமாக வதந்திகளை மறுத்துள்ளார்.

திருமண பேச்சு

திருமண பேச்சு

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூருக்கும் ஆலியா பட்டுக்கும் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழ, அதனை மறுக்காமல், கொரோனா பரவல் இல்லாமல் இருந்திருந்தால், எங்களுக்கு இந்நேரம் திருமணம் எப்போதோ ஆகி இருக்கும் என ரன்பீர் அதிரடியாக பதில் அளித்தது பாலிவுட்டில் பரப்பை கிளப்பியது.

வரும் ஆண்டில்

வரும் ஆண்டில்

மேலும், வரும் 2021ம் ஆண்டில் நிச்சயம் எங்களது திருமணம் நடைபெறும் என்றும், ரன்பீர் கபூர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தது பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தியது. ரன்பீர் கபூர் முதல் முறையாக தனது காதலி என ஆலியாவை குறிப்பிட்டதும் வைரல் ஆனது.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவிற்கு ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் குடும்பத்துடன் சென்றது, புத்தாண்டு அன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யத்தான் என்கிற தகவல் பாலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. வரும் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த நிலையில், புத்தாண்டில் நிச்சயம் செய்து கொள்ளப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மறுப்பு தெரிவித்த மாமா

மறுப்பு தெரிவித்த மாமா

ஆனால், ரன்பீர் கபூரின் மாமா ரந்தீர் கபூர், இந்த நிச்சயதார்த்த தகவல் முற்றிலும் வதந்தி. அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா சென்றுள்ளனர். நிச்சயம் செய்வதாக இருந்திருந்தால், மாமா நானும் அவர்களுடன் சென்றிருப்பேனே என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரன்வீர் தீபிகாவுடன்

ரன்வீர் தீபிகாவுடன்

ரந்தபூர் சென்ற ஆலியா பட், ரன்பீர் கபூர், புத்தாண்டை கொண்டாட அதே இடத்திற்கு வந்திருந்த ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். விரைவில் கோலாகலமாக இன்னொரு பாலிவுட் திருமணம் அரங்கேறப் போவது மட்டும் உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X