twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலகினரின் பேரணிக்கு ஏற்பாடுகள் இல்லை.. கோரிக்கை மனு மட்டும் கொடுக்க திட்டமா?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் ஸ்ட்ரைக் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த 16-ம் தேதி முதல் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டது. சில படங்கள் மட்டுமே அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள்.

    டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த ஸ்ட்ரைக் ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரிடையே இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    No arrangements for Rally - producer council protest

    இன்னும் போராட்டம் இழுத்துக்கொண்டே சென்றால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்கவேண்டி வரும் என்பதால் விரைவில் ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி திரையுலகினர் பேரணி செல்லவிருப்பதாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

    ஆனால், இதற்கிடையே, தமிழகம் முழுக்கவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம், நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒரு பக்கம் போராட்டம். இன்னொரு புறம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்தப் போராட்டங்களில் இணைந்துள்ளனர். இன்று ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திரையுலகினரின் போராட்டம் கவனத்தை திசைதிருப்புவதாக அமைவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    நாளை பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது தொடர்பான எந்த ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுத்தவில்லை. தற்போதைய சூழலில் பேரணிக்கு அனுமதி கிடைப்பதும் குதிரைக் கொம்பு தான்.

    தேவைப்படுமானால் சினிமாவுக்கு நல வாரியம் அமைக்கப்படும் எனக் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நேற்று, விஷால் நன்றி தெரிவித்தார். இதனால், நாளை திரையுலகினரின் பேரணி நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பார்கள் எனத் தெரிகிறது. ஆக, தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு இன்னும் முடிவு வந்தபாடில்லை. ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    English summary
    Recently, Producers council President Vishal announced that the filmmakers will go to the rally to insist on various demands. In the meanwhile, Tamilnadu has been undergoing a lot of struggles. It seems that tomorrow's rally is unlikely to happen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X