அடடா.. போச்சா.. பிக்பாஸில் இம்முறை இப்படி ஒரு அதிரடி மாற்றமாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களும் பெரும் ஹிட்டானது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சீசன் 4 நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது.
ஜூன் மாதமே தொடங்கப்பட வேண்டிய இந்நிகழ்ச்சி கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக தாமதமாக தொடங்கப்படுகிறது.

கொரோனா டெஸ்ட்
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்பட்டுள்ளனர்.

ஆட்கள் குறைவு
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களும் கம்மி என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. கொரோனா காரணமாக நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதி இல்லை
அதன்படி இம்முறை கடந்த சீசன்களை போல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையான இரண்டு நாட்கள் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து அந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பார்.

பார்வையாளர்கள்
அதோடு எலிமினேஷன் குறித்தும் அறிவிப்பார் நடிகர் கமல்ஹாசன். இவை அனைத்தும் குறிப்பிட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

காத்திருக்க வேண்டும்
பார்வையாளர்கள் மூலம் ஏதாவது ஒன்றிரண்டு தகவல்கள் வெளியே கசியும். இதனால் முன்கூட்டியே யார் வெளியேறுகிறார்கள் யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது முன்கூட்டியே வெளியாகும். ஆனால் இம்முறை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கமல் சொல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
Recommended Video

ரசிகர்கள் அதிர்ச்சி
இதனால் நேரில் கமல்ஹாசனை பார்க்கலாம் என்று ஆசைப்பட்ட பார்வையாளர்களும், அந்த வாய்ப்பு இல்லாமல் போனதை நினைத்து கவலை அடைந்துள்ளனர். மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











