16 கோடி பண மோசடி வழக்கு.. ரவீந்தர் சந்திரசேகருனுக்கு நோ ஜாமின்.. சோகத்தில் வாடும் மகாலட்சுமி

சென்னை: மகாலட்சுமி வந்த நேரம் என் வாழ்க்கையே மாறிப்போச்சு என தொடர்ந்து சமூக வலைதளங்களில் காதல் மழை பொழிந்து வந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தற்போது கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சுமார் 16 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

ஒரே காதல் மழை: லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். முன்னாள் சன் மியூசிக் விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமி கடந்த ஆண்டு ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

No bail for Ravindar Chandrasekaran in 16 crore fraud case

3 மாதங்கள் கூட தாண்டாது, விவாகரத்து பண்ணிட்டு பிரிஞ்சிடுவோம் என்றெல்லாம் தொடர்ந்து யூடியூப் சேனல்களில் எங்களைப் பற்றி பேசி வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓராண்டு திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து விட்டோம் என சமீபத்தில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரவீந்தர் சந்திரசேகரன் பெரிய போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார்.

16 கோடி மோசடி: ஆனால், அதற்குள் இப்படி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் சிக்குவார் என்பதை நினைத்திருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர், பிக் பாஸ் விமர்சகர் என வலம் வந்துக் கொண்டிருந்த ரவீந்தர் சந்திரசேகரன் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் கிட்டத்தட்ட 16 கோடி வரை பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளாராம். அந்த வழக்கில் தான் தற்போது போலீஸார் ரவீந்தரை தொக்காக தூக்கி உள்ளனர்.

No bail for Ravindar Chandrasekaran in 16 crore fraud case

ஜாமின் மறுப்பு: தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பாஸ்போர்ட்களை எல்லாம் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் ரவீந்தர் தரப்பு அளித்த மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் தர மறுத்து உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி கணவரை ஜாமினில் கூட மீட்க முடியவில்லை என்கிற வேதனையில் வாடி வருவதாக கூறுகின்றனர். மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரன் வசமாக சிக்கியிருப்பதால் தான் அவருக்கு நீதிபதிகள் ஜாமின் வழங்கவில்லை என்றும் இத்தனை கோடி ரூபாயை ஏமாற்றித் தான் தயாரிப்பாளர் போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாரா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X