twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேச்சுவார்த்தையில் சமரசம்... பிரகாஷ்ராஜ் மீதான தடை ரத்து

    |

    ஹைதராபாத் : பேச்சுவார்த்தையில் உண்டான சமரசத்தைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான தடையை தெலுங்கு பட உலகம் ரத்து செய்துள்ளது

    'ஆவடு' என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கின் போது, கதையை மாற்றச் சொல்லி பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்படத்தின் டைரக்டருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே
    மோதல் ஏற்பட்டது.

    மோதலின் போது, பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்கப் பட்டிருந்தது.

    தடை...

    தடை...

    இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்க டைரக்டர் சங்கம் முடிவு எடுத்தது.

    துரதிர்ஷ்டவசமானது...

    துரதிர்ஷ்டவசமானது...

    இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘‘இருபது வருடம் சினிமாவில் இருக்கும் எனக்கு ஒரு வருடம் தடை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது. நான் எந்த தப்பும் செய்யவில்லை'' என விளக்கமளித்திருந்தார்.

    பேச்சுவார்த்தையில் சமரசம்...

    பேச்சுவார்த்தையில் சமரசம்...

    இந்நிலையில் நடிகர் சங்கம், டைரக்டர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி பிரகாஷ்ராஜ் விவகாரம் குறித்து ஆலாசனை நடத்தினர். இதில் ‘ஆவடு' பட டைரக்டர் ஸ்ரீனு வைத்லா மற்றும் பிரகாஷ்ராஜும் பங்கேற்றனர்.

    தடை வாபஸ்...

    தடை வாபஸ்...

    பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு விதிக்கப் பட்ட தடை வாபஸ் பெறப்பட்டது. மேலும், அவருக்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

    English summary
    Prakash Raj was embroiled in a controversy for his alleged misbehaviour on the set of Aagadu. However, all that has now come to an end. After listening to all the parties involved, the latest news is that the issue has been resolved amicably and there'll be no ban on Prakash Raj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X