மதன் பாபு மரணம்.. ஒரு நடிகர் கூட வரல.. உறவினர்கள் வேதனை!
சென்னை: நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாபு. அந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த மதன் பாபு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை அடையாறு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதும், உறவினர்களை தவிர எந்த முன்னணி நடிகரும் வரவில்லை என உறவினர்கள் வேதனை அடைந்தனர்.
மதன் பாபு அவர்களுக்கு கிட்டத்தட்ட 15 வருடமாகவே எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. இதுதான் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதற்கு காரணம். ஒவ்வொரு மனிதனுக்கும் காலையிலிருந்து இரவு வரை செய்வதற்கு ஏதோ ஒரு தொழில் இருக்கும். அதுபோல தான் மதன் பாபு அவர்களுக்கு நடிப்பது தொழிலாகவே இருந்தது.
ஆனால், இவருக்கு கிட்டத்தட்ட 15 வருடமாகவே எந்த வித பட வாய்ப்பு வரவில்லை. இவருடன் நடித்த சக நடிகர்கள் உயரத்திற்கு சென்று விட்டார்கள். அப்போதும் கூட இவருக்கு பட வாய்ப்பு யாரும் வாங்கி தரவில்லை. அவர் உடல்நிலை மோசமானதற்கு அதுவும் ஒரு காரணம்.

திடீர் மரணம்: நேற்று இரவு இறந்து விட்டதாக செய்தி வெளியானது அப்படி இருந்தும் இப்போது வரைக்கும் எந்த ஒரு நடிகரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவே இல்லை. இவர் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை. அனைத்தையும் முன்னணியின் நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார் அப்படி இருந்தும் ஒருவர் கூட எட்டி பார்க்கவே இல்லை. இன்றைய காலத்தில் பணம், புகழ், பெயரை பார்த்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மதன் பாபு ஒரு சாதாரணமான நடிகரே இல்லை அவருடைய சிரிப்பு தனித்துவமானது. சிரிப்பு மனிதர் என்ற சொல்லுக்கு தகுதியானவர் மதன் பாபு சார் தான்.
ஒருத்தர் கூட வரல: இன்றைக்கு மயில்சாமி, விஜயகாந்த், விவேக் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக மருத்துவ உதவி செய்திருப்பார்கள். இறப்பு தொடங்கி மயான முறை கூட இருந்திருப்பார்கள். ஆனால், அவருடன் நடித்த எந்த பெரிய நடிகரும் வரவே இல்லை. அதை நினைக்கும் போது வேதனையாக தான் இருக்கிறது. ஒரு நடிகர் நன்றாக இருக்கும்போது அவரை சந்திக்கிறீர்களா... இல்லையா என்பது அப்பாற்பட்ட விஷயம் ஆனால், அந்த கலைஞன் இறந்த பிறகு அவருடைய இறுதி சடங்கில் ஒவ்வொரு கலைஞர்களும் வரவேண்டும். அது தான் அந்த நடிகருக்கு கடைசியாக நாம் செலுத்தும் மரியாதை. அவருடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் என மதன் பாபு அவர்களின் உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளார்.
மதன் பாபு இறந்த செய்தி கேள்விப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நேராக வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல, பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











