Azhagu Serial: புடிக்காத பொண்டாட்டின்னா ஃபிரண்டுக்கு ஆக்சிடென்ட்டா.. என்னங்கடா?

சென்னை: சீரியல்களில் புடிக்காத பொண்ணு கூட கல்யாணம் ஆகி அவ பிடிக்காத பொண்டாட்டின்னாலும் முதலிரவுன்னு ஒன்னு வருமா இல்லியா? வருது...அந்த முதலிரவை நிறுத்திடறானுவ.. அது மட்டுமா? அன்னிக்கு நைட்டுன்னு பார்த்து ஃபிரண்டுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு சொல்லிட்டு கிளம்பிடறானுவ...!

சன் டிவியின் அழகி சீரியல், சாக்லேட் சீரியல், சந்திரலேகா சீரியல், கண்மணி சீரியல்னு இப்படி பட்டியல் நீளுதுங்க. வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம்.. கால் பட்டா குத்தம்னு எதுக்கு சொல்லுவானேன்னு இப்படி கிளம்பிட்டானுவ.

கொட்ட கொட்ட முழிச்சு இருக்கற புது பெண்டாட்டி ஒண்ணுமே நடக்காம காலையில எழுந்திரிச்சு தலை குளிச்சுட்டு, தலையில துண்டை கட்டிக்கிட்டு காபி குடுப்பா பாருங்க...வேணாம் எதுக்கு வம்பு!

அழகு திருநா அர்ச்சனா

அழகு திருநா அர்ச்சனா

அழகு சீரியலில் அர்ச்சனாவை விரும்பித்தான் திருநா கல்யாணம் செய்துக்கறான். அந்த நேரம் பார்த்து இந்த பொண்ணு அதாங்க திருநா காதலிச்ச நிவி எழவு செத்துப் போயிட்டான்னு நினைச்சவ உயிரோட வந்து நிக்கறா. பாழாய் போன மனசு இனி கேட்குமா? உருகி உருகி காதலிச்ச பொண்ணாச்சே.. முதலிரவு அன்னிக்கு அவளுக்கு உடம்பு சரி இல்லமாப் போக, ஃபிரண்டுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு எஸ்கேப் ஆயிட்டான்.

கண்மணி வளர் ஆகாஷ்

கண்மணி வளர் ஆகாஷ்

கண்மணி சீரியல் ராத்திரி 8:30 மணிக்கு ஒளிபரப்பாகுது பாருங்க.. அந்த சீரியலில் வளரும், ஆகாஷும் விரும்பித்தான் கல்யாணம் செய்துக்கறாங்க. வளர்மதியின் கள்ளத்தனம் இந்த ஆகாஷ் தம்பிக்கு பிடிக்கலை. இதனால், முதலிரவை தள்ளிப் போட்டாலும், ஒரு நாள் ஆகாஷின் சித்தி முதலிரவு ஏற்பாடு பண்றாங்க. அப்போ பார்த்து ஆகாஷின் தோழி சினேகாவுக்கு பிரச்சனை வந்துடுது. அவளை பார்க்கப் போறேன்னு எப்படி பொண்டாட்டிகிட்டே சொல்லுவான். இருந்து இருந்து இன்னிக்குத்தான் ரொம்ப நாள் கழிச்சு முதலிரவு நடக்குது. அதனால், சொல்லி வச்ச மாதிரி ஃபிரண்டுக்கு ஆக்சிடெண்ட்னு சொல்லி கிளம்பிடறான்.

சந்திரலேகா சரண்யா சபரி

சந்திரலேகா சரண்யா சபரி

சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் சபரிக்கும் சரண்யாவுக்கு கல்யாணம் ஆன கையோட, முதல் பொண்டாட்டி லேகா முழுகாம இருக்கான்னு சபரிக்குத் தெரிஞ்சுருது. அதனால் சரண்யா கூட சேர்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. லேகா வயித்துல வளரும் தன் குழந்தையை நினைச்சுகிட்டே இருக்கான். இப்போ சரண்யா கூட முதலிரவு ஏற்பாடு செய்துட்டாங்க. உடனே இவனும் சொல்லி வச்சா மாதிரியே ஃபிரண்டுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு சொல்லிட்டு போயிட்டான்.

சாக்லேட் இனியா கார்த்திக்

சாக்லேட் இனியா கார்த்திக்

சாக்லேட் சீரியலில் இனியாவை லவ் பண்றதா சொல்லி ஏமாத்தி கல்யாணம் செய்துக்கறான் கார்த்திக். அவ வேற கருப்பு பொண்ணு.. இப்படித்தான் சீரியலில் காமிக்கறாங்க. நாம எதுவும் கற்பனை பண்ணி சொல்லலை. அதை விடுங்க.. கல்யாணம் செய்துகிட்டு முதலிரவு வருமா இல்லியா? வந்துச்சு.. இவனும் ஃபிரண்டுக்கு ஆக்சிடென்ட்டுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். இப்படியே எல்லா டைரக்டரும் யோசிக்கறாய்ங்க... ஆனா சொந்தமா யோசிக்கறாங்களான்னா இல்லை...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X