களை கட்டாத தமிழ்ப் புத்தாண்டு.. பெரிய படங்கள ஏதுமில்லை
சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை பண்டிகைகளையும் சினிமா கொண்டாட்டங்களையும் பிரிக்க இயலாது.பிரபல நடிகரின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அவர்களது ரசிகர்களுக்கு பண்டிகை திரையரங்குகளில் தான் இருக்கும். முன்பெல்லாம் ஒரு பண்டிகை என்றால் பிரபல நடிகர்களின் மோதிக்கொள்வதோடு, நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதுண்டு.
தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல், தீபாவளிக்கு அடுத்தபடியாக தமிழ் புத்தாண்டுக்கும் இடம் உண்டு. பொங்கல், தீபாவளிக்கு ரிலீசுக்கு எப்படி திரையரங்குகள் கிடைப்பது கஷ்டமோ, அதேபோல் தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்வதர்க்கு போட்டி ஏற்பட்ட காலங்கள் உண்டு.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ் புத்தாண்டில் ரிலீசான வீரா, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி என அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன.இதனால், தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் ரஜினி படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற செண்டிமெண்ட் கூட உருவானது.
நடிகர் விஜய்யை மாஸ் ஹீரோவாக்கிய கில்லி, மாபெரும் வெற்றி பெற்ற தெறி போன்ற படங்கள் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆனவையே. ஆனால் இந்த ஆண்டு, தமிழ் புத்தாண்டு சினிமா ரசிகர்களுக்கு பரபரப்பு இல்லாத ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ் புத்தாண்டுக்கு அதிக படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், இந்த ஆண்டு வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன.

வைபவ் நடிப்பில் வெளியாகவிருந்த ஆர்.கே.நகர் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், இந்த 2 படங்களும் தமிழ் புத்தாண்டுக்காக ரிலீஸ் செய்யப்படுவதாக என்ன முடியாது. சாதாரண வெள்ளிக்கிழமைகளில் கூட 2-ற்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆவதுண்டு.

பண்டிகைக்கு பட ரிலீஸ் என்பது, அன்றைக்கு பெரும்பாலானோருக்கு விடுமுறை என்பதால் அதிக கூட்டம் என்பதற்காக உருவானதே. சென்னை போன்ற நகரங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை இல்லை என்பதால் , இன்றுள்ள நிலையில் தமிழ் புத்தாண்டிற்கு குறைந்த படங்கள் வெளியாவதில் ஆச்சர்யமில்லை .


Click it and Unblock the Notifications