அஜித் குமார் பிறந்தநாளை ரொம்பவே எதிர்பார்க்கும் ரசிகர்கள்.. ஆனால், கிடைக்கப் போவது அல்வாதானா?

சென்னை: நடிகர் அஜித் குமாரின் 53வது பிறந்தநாள் மே 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் தற்போதே #AdvanceHBDAjithKumar ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சோஷியல் மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய அப்டேட்கள் கிடைக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரிய அளவிலான எந்த ஒரு அப்டேட்டும் வரப்போவதில்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

No big update from Vidamuyarchi and Good Bad Ugly team on Ajith Kumar s Birthday

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெயிட்டான அப்டேட் நிச்சயம் கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் ஹாஷ்டாக்கை டிரெண்டு செய்து வரும் நிலையில் இப்படி ஒரு தகவல் பலரையும் அப்செட் ஆக்கி உள்ளது.

அஜித் குமாருக்கு 53 வயசு: சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் நாளை தனது 53-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று அஜித் குமார் பிறந்த நிலையில், உழைப்பாளர் தினத்தை மறந்து விட்டு ரசிகர்கள் அஜித் பிறந்த நாளாகவே மே 1-ம் தேதியை கொண்டாடி வருகின்றனர்.

No big update from Vidamuyarchi and Good Bad Ugly team on Ajith Kumar s Birthday

குடும்பத்துடன் கொண்டாட்டம்: நடிகர் அஜித் புத்தாண்டு, தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் உள்ளிட்டவற்றை இந்தாண்டு துபாயில் குடும்பத்துடன் கோலாகலமாக நடனம் ஆடி கொண்டாடினார். அதன் பின்னர் சென்னையில் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அவனுக்கு பிடித்தமான ஃபுட்பால் தீம் கேக்கை வாங்கிக் கொடுத்து கொண்டாடினார். சமீபத்தில் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து திருமண நாளை நட்சத்திர ஓட்டலில் கொண்டாடி அஜித் குமார் தனது பிறந்த நாளையும் குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெண்டிங்கில் அஜித்: அஜித் குமார் பிறந்தநாள் நாளை கொண்டாடவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இப்போதே சோஷியல் மீடியாவில் அலப்பறையை ஆரம்பித்து விட்டனர். #AdvanceHBDAjithKumar ஹாஷ்டேக்கை போட்டு அஜித் குமாரின் படங்களின் பாடல்கள், அவரது நடிப்பு, அவரது சினிமா வாழ்க்கை குறித்த ஏகப்பட்ட போஸ்ட்டுகளை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

No big update from Vidamuyarchi and Good Bad Ugly team on Ajith Kumar s Birthday

அப்டேட்டுக்கு அல்வா: விடாமுயற்சி படத்தில் இருந்து நாளை எந்தவொரு அப்டேட்டும் வராது என்கிற ஷாக்கிங் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக அஜித்தின் பிறந்தநாளை வாழ்த்தி ஒரு போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கின்றனர். அதே போல குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தை வாழ்த்தி ஒரு போஸ்டர் மட்டும் வெளியாகும் எனக் கூறுகின்றனர். மற்றபடி பெரிதாக விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் என எதுவும் வர வாய்ப்பில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X