பிரபலங்களுக்கு திடீரென அஜித் போட்ட கண்டிஷன்.. அப்செட்டான ரசிகர்கள்.. அப்போ வலிமை ஃபர்ஸ்ட் லுக்?

சென்னை: தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Recommended Video

Thala Ajith request | Common DP | May Day • Thala 48th Birthday

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தை தெறிக்கவிட திட்டமிட்ட அஜித் ரசிகர்கள் பல முன்னணி பிரபலங்களை வைத்து காமன் டிபியை இன்று மாலை வெளியிட திட்டமிட்டனர்.

இந்நிலையில், அந்த பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அஜித் அலுவலகத்தில் இருந்து வந்த போன் கால், ரசிகர்கள் நினைத்த கொண்டாட்டத்திற்கு தடை போட்டு இருக்கிறது.

யார் அந்த பிரபலங்கள்

யார் அந்த பிரபலங்கள்

தல அஜித்தின் காமன் டிபியை வெளியிட நடிகர் சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், அருண் விஜய், ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், நித்தி அகர்வால், ஆர்த்தி, ராகுல் தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம் உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து காமன் டிபியை வெளியிட ரசிகர்கள் பிளான் செய்துள்ளனர்.

நோ செலிபிரேஷன்

நோ செலிபிரேஷன்

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தை தல அஜித் ரத்து செய்துள்ளார்.

அஜித் அலுவலகத்திலிருந்து

அஜித் அலுவலகத்திலிருந்து

தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக அஜித் பிறந்தநாளை கொண்டாட நினைத்த நிலையில், காமன் டிபியை வெளியிட இருந்த அத்தனை பிரபலங்களுக்கு அஜித் அலுவலகத்திலிருந்து திடீரென போன் கால் வந்திருக்கிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, காமன் டிபி வெளியிடுவது உள்ளிட்ட எந்தவொரு கொண்டாட்டத்தையும் தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டதாக சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

தல அஜித்தின் வார்த்தையை மீற முடியாமல் பல பிரபலங்களும், காமன் டிபியை தங்களால் வெளியிட முடியாது என தெரிவிக்க, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக இப்படியொரு பிரம்மாண்ட பிளான் போட்ட அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர். எதுவாக இருந்தாலும், தல அஜித்தின் பிறந்தநாளன்று சமூக வலைதளத்தை வாழ்த்துக்களால் நிரப்பாமல் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் என ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காமன் டிபிக்கே இப்படியொரு தடை போட்டிருக்கும் நடிகர் அஜித், நிச்சயம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்த சமயத்தில் வெளியிட அனுமதி அளித்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X