CM விஜய்க்கு வாழ்த்து சொல்லாத ரஜினிகாந்த்.. இன்னும் பனிப்போர் தொடருதான்னு கேட்கும் நெட்டிசன்ஸ்?

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தமிழ் திரைத்துறையில் கோலோச்சியவருமான விஜய் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு இது முதலாவது பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகள் அவருக்கு எட்டுத் திக்கு இருந்தும் வந்து கொண்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்களே அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருப்பது பேசு பொருளாகி உள்ளது.

திரைத்துறையில் இருவருக்கும் இடையில் அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்க்கு இடையில் பெரும் பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்ற பேச்சுக்கள் தொடர்ந்து அடிபட்டு வந்தது. குறிப்பாக இருவரது சம்பளம், வசூல் கணக்கு, அதிலும் முதல் நாள் ஓப்பனிங் வசூல், படத்தின் மொத்த வசூல் என இருவருக்கும் இடையில் சரியான போட்டி நிலவுகிறது என்ற பேச்சுக்கள் அடிபட்டது.

No Birthday Wish from Rajinikanth to CM Vijay Fans Spark Fresh Cold War Debate

இப்படி இருக்கையில் வழக்கமாகவே விஜய்க்கு ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது இல்லை. ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சராக விஜய் பிறந்த நாளைக் கொண்டாடுவதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

ரஜினிகாந்த்: அதேபோல் திரைத்துறையைச் சார்ந்த பலருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கம் போல் ஸ்பெஷல் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறாதது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதுவும் குறிப்பாக நெட்டிசன்கள் மத்தியில் முதலமைச்சர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறாததை பார்க்கும் போது, அவர்களுக்கு இடையிலான பனிப்போர் என்பது உண்மைதான் போலயே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

No Birthday Wish from Rajinikanth to CM Vijay Fans Spark Fresh Cold War Debate

மோகன்லால்: மலையாள திரை உலகின் ஜாம்பவானான மோகன்லால் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டார். அப்படி இருக்கையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தாதது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X