twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களை யாரும் கைது செய்யலை நாடு கடத்தலை - ஒய்.ஜி.மதுவந்தி அருண் விளக்கம்

    |

    சென்னை: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நிகழ்ச்சி நடத்தச் சென்ற மதுவந்தியும், அவருடைய தந்தை ஒய்.ஜி.மஹேந்திரனும் தகுந்த விசா இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இது பற்றி விளக்கமளித்த மதுவந்தி அருண், சிகாகோவில் மேடை நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனில், பி 3 விசா பெற வேண்டும். ஆகையால் நீங்கள் இந்தியாவிற்கு சென்று மறுபடியும் தகுந்த விசா பெர்மிட் பெற்று கொண்டு வரவும் என்று கூறியதால் நாங்களாக தான் இந்தியாவிற்கு திரும்பி வந்தோம். எங்களை யாரும் கைது செய்யவும் இல்லை நாடு கடத்தவும் இல்லை, என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

    எழுத்தாளர், நாடக கலைஞர், குணச்சித்திர நடிகர் என பன்முகம் கொண்ட ஒய்.ஜி.மஹேந்திரனின் மகளும், லதா ரஜினிகாந்த்தின் சகோதிரியின் மகளும் ஆன மதுவந்தி அருண், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரும் இவரது தாத்தாவை போல ஒரு கல்வி ஊக்குவிப்பாளர் மற்றும் நடிகையும் ஆவார். மேடை நாடகங்களின் இயக்குனர் மற்றும் நடன இயக்குனரும் ஆவார்.

    No Body arrested or Deported us -YG. Madhuvanti Arun

    மதுவந்தி மற்றும் அவரது தந்தை ஒய்.ஜி. மஹேந்திரன் இருவரும் பல நாடுகளில் பல மேடை நாடகங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அந்த வகையில் அக்டோபர் 4ஆம் சிகாகோவில் ஒரு மேடை நிகழ்ச்சி நடத்துவதற்காக நான்கு பேருடன் சென்னையில் இருந்து சிகாகோவிற்கு பி1 விசா பெற்று சென்றுள்ளனர்.

    அங்கு அவர் விமான நிலையத்திலேயே காவல் துறையினரால் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் பி1 விசா பெற்று சென்றது. சிகாகோவில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் பி 3 விசா தான் பெற்று செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் எடுத்ததோ பி 1 விசா என்பதால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுவந்தி அருண், தன்னைப் பற்றி தவறாக பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அவர்கள் சிகாகோவிற்கு சென்றதும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிகாகோவில் மேடை நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனில், பி 3 விசா பெற வேண்டும்.

    No Body arrested or Deported us -YG. Madhuvanti Arun

    ஆகையால் நீங்கள் இந்தியாவிற்கு சென்று மறுபடியும் தகுந்த விசா பெர்மிட் பெற்று கொண்டு வரவும் என்று கூறியதால் நாங்களாக தான் இந்தியாவிற்கு திரும்பி வந்தோம். எங்களை யாரும் கைது செய்யவும் இல்லை நாடு கடத்தவும் இல்லை, என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

    மேலும் தற்போது அமெரிக்க வழக்கறிஞரை வைத்த தகுந்த ஒர்க் பெர்மிட் விசாவான பி 3 விசாவுக்கு விண்ணப்பித்துள்ளோம். நங்கள் அந்த விசாவை வைத்து கொண்டு மறுபடியும் சிகாகோவிற்கு சென்று நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திவிட்டு நாடு திரும்புவோம், என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார் மதுவந்தி அருண். இப்படி வெவ்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் எனது உண்மை நிலவரம் என்பதில் குழப்பமே நிலவுகிறது.

    English summary
    Rumor has it that Madhuvanti Arun and his father YG Mahendran were arrested for lack of a valid visa while attending an event in Chicago, USA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X