எமோஷன் சீனில் வடிவேலு மாதிரி யாராலயும் நடிக்க முடியாது!

சென்னை : காலங்கள் கடந்தும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றும் பலரை ரசிக்க வைத்துக் கொண்டுள்ளது

நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு இப்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்

இந்த நிலையில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் வடிவேலு மாதிரி ஏமோஷன் சீனில் யாராலும் நடிக்க முடியாது என பாராட்டியுள்ளார்

காமெடி ஜாம்பவனாக

காமெடி ஜாம்பவனாக

90 களில் தொடங்கி இன்றுவரை நடிகர் வடிவேலுவின் காமெடி தான் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. இந்த காலத்திற்கும் ஏற்றவாறு வடிவேலு நடித்துள்ள பல திரைப்படங்களின் காமெடிகள் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. தனது வித்தியாசமான மாடுலேஷன் திகைக்க வைக்கும் காமெடி என தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் தோன்றாதது மிகப் பெரும் வெறுமையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

இந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வடிவேலு இப்பொழுது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கதாநாயகியே இல்லாமல் முழுக்க முழுக்க வடிவேலுவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

விஜய் ஆக்சன் ஹீரோவாக

விஜய் ஆக்சன் ஹீரோவாக

சரத்குமார் நடிப்பில் வெளியான மகா பிரபு மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ வெங்கடேஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த ஏ வெங்கடேஷ் நடிகர் விஜய்யை மாஸ் ஹீரோவாக ஆக்கினார் . விஜய் தொடர்ந்து சாப்டான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்த நிலையில் பகவதி படத்தின் மூலம் விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது ஏ வெங்கடேஷ் தான். பகவதி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிறகு விஜய் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.

எமோஷன் சீனில் வடிவேலு

எமோஷன் சீனில் வடிவேலு

அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான பகவதி திரைப்படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். அதில் ஒரு வேடத்திற்கு சின்ன தளபதி என பெயரையும் வைத்திருப்பார். காதல் ஆக்ஷன் காமெடி என அனைத்தும் கலந்த பகவதியில் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேலு கிளைமாக்ஸ் காட்சியில் சென்டிமென்ட்டிலும் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த நிலையில் பகவதி படத்தில் வடிவேலுவை எப்படி சென்டிமென்ட் காட்சியில் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு வடிவேலு மாதிரி எமோஷன் சீனில் யாராலும் நடிக்க முடியாது. அதை பகவதி படத்திலும் வடிவேலு நிரூபித்திருப்பார் என இயக்குனர் ஏ வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X