twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    180கி.மீ., வேகத்தில் டூப் போடாமல் பைக்கில் பறந்த அஜித்.. திலீப் சுப்புராயன் சொன்ன வலிமை சீக்ரெட்ஸ்!

    |

    சென்னை: அஜித்தின் வலிமை படத்தை பார்த்த அனைவரும் அதன் பைக் ஸ்டன்ட் காட்சிகளை தமிழ் சினிமா எப்படி சாதித்தது என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், வலிமை படத்திற்கு மிகப்பெரிய வலிமையாக இருந்த அதன் ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

    வலிமை படத்தில் அதிகளவில் சிஜியே பயன்படுத்தவில்லை என்றும் மேட்மேக்ஸ் பட பாணியில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம் என்றும் ஏகப்பட்ட சிறப்பான ரகசியங்களை ஷேர் செய்து அஜித் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

    அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்! அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!

    பவர்ஃபுல் ஆக்‌ஷன்

    பவர்ஃபுல் ஆக்‌ஷன்

    வலிமை எனும் பெயருக்கு ஏற்றவாறு படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை மெய் மறக்கச் செய்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இப்படியொரு பைக் ரேஸ் காட்சிகள் இதுவரை எந்தவொரு இந்திய படங்களிலும் இடம்பெற்றது இல்லை என ஏகப்பட்ட பிரபலங்களும் அஜித் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

    திலீப் சுப்பராயனுக்கு பாராட்டு

    திலீப் சுப்பராயனுக்கு பாராட்டு

    எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார், கார்த்திகேயா மற்றும் ஹுமா குரேஷி நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை பார்த்த அனைவருமே அதன் பைக் ரேஸ் காட்சிகளை பாராட்டி வருகின்றனர். அந்த காட்சிகளை இயக்கிய ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனுக்கு தான் இந்த மொத்த பெருமையும் சென்று சேரும் என அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், அவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    டூப் போடமாட்டார்

    டூப் போடமாட்டார்

    நடிகர் அஜித் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் டூப்பே போடவில்லை என்றும் அது அவருக்கு பிடிக்காது என்றும் வலிமை படத்தில் மிரட்டலான ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கிய திலீப் சுப்புராயன் தனது பேட்டியில் கூறியுள்ளார். பல முறை அஜித் ஓவர் ஸ்பீடில் பைக் ஓட்டிக் கொண்டு வந்து தன்னை இடித்து விடுவாரோ என்று பயந்ததாகவும் திலீப் சுப்பராயன் கூறியுள்ளார்.

    180கி.மீ., ஸ்பீடில்

    180கி.மீ., ஸ்பீடில்

    ஸ்லோவா பைக் ஓட்டி படம் எடுத்தால் அது தெளிவாக தெரிந்துவிடும். வலிமை படத்திற்காக எப்போதுமே 120 முதல் 140கி.மீ வேகத்திலேயே பைக்கர்கள் பைக் ஓட்டி ஸ்டண்ட் செய்தனர். அதிலும், ஒரு காட்சியில் நடிகர் அஜித் குமார் 180கி.மீ., வேகத்தில் செல்லும் காட்சியை படம் பிடித்தது தான் தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்றும் திலீப் சுப்பராயன் மெய் சிலிர்த்து கூறியுள்ளார்.

    அந்த விபத்து

    அந்த விபத்து

    வலிமை படத்திற்காக நடிகர் அஜித் டூப் போட்டுக் கொள்ளாமல் ஏகப்பட்ட காட்சிகளில் பல ரிஸ்க்குகளை எடுத்து நடித்துக் கொடுத்துள்ளார். அந்த விபத்து நடந்த நாளில் முன்னதாகவே அந்த பைக் வீலிங் டேக் ஓகே செய்யப்பட்டது. ஆனால், அஜித் இன்னமும் கொஞ்சம் ஹைட் தூக்குகிறேன் என முடிவு செய்து 120 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டி வந்து வீலிங் செய்தார். அப்போது தான் அந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறினார்.

    Recommended Video

    நடிகர் AjithKumar தம்பி Anil Kumar முதல் Tweet | அண்ணன் படம் பற்றி தம்பி Tweet, Valimai FDFS
    அதை மட்டும் அவர் பண்ணலன்னா

    அதை மட்டும் அவர் பண்ணலன்னா

    நடிகர் அஜித் எந்தளவுக்கு ஒரு புரொபஷனல் என்பது அப்போது தான் எனக்கே முழுதாக புரிந்தது. அந்த ஸ்டன்ட் செய்யும் போது புதிதாக போடப்பட்ட ரோட்டில் சின்னதாக ஒரு செம்மண் இருந்தாலும், அது வீலில் பட்டால், பைக்கை நிலை குலைய செய்து விடும். அப்போது பைக்கை கன்ட்ரோல் செய்ய நினைத்தால் ஏடாகூடமாக அடிபட்டு இருக்கும். ஆனால், அஜித் அப்படியே தனது கையை பைக்கில் இருந்து விட்டு கீழே விழுந்ததால் தான் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறினார். மேட்மேக்ஸ் படத்தில் செய்ததை போல பல காட்சிகளையும் லைவ்வாக செய்துள்ளோம். அதனால், தான் தற்போது தியேட்டரில் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர் என பேசியுள்ளார்.

    English summary
    Valimai stunt choreographer Dhilip Subbarayan shares lot of making secrets about Valimai movie. He says, No body double for stunts and Ajith Kumar rode 180Km for Valimai action sequences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X