படம் பாத்துட்டு யாருமே என்ன பாராட்டல மனமுடைந்த பிரசன்னா.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

சென்னை : 2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா.

Recommended Video

Prasanna, Regina Cassandra நடித்து வெளியான Fingertip | Season 2 | Yessa? Bussa? *Kollywood

ரகசியமாய் , காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல் என்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார்.

2008 ஆம் ஆண்டு இவர் நடித்த அஞ்சாதே திரைப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இது குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ளார் நடிகர் பிரசன்னா.

 அறிமுக நாயகன்

அறிமுக நாயகன்

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பிரசன்னா பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் 2008 ஆம் ஆண்டு அஞ்சாதே திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த வில்லனுக்கான விருதும் கொடுக்கப்பட்டது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும் பல படங்கள் இவருக்கு ஃளாப் படங்கள் ஆகவே அமைந்தது.

 தொடர் தோல்வி

தொடர் தோல்வி

முரண், புலிவால், நேற்று இன்று, நிபுணன் என்று தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த பிரசன்னாவிற்கு, துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. துப்பறிவாளன் படத்தில் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்,வில்லன் கதாபாத்திரத்தில் வினய் மற்றும் ஆண்ட்ரியா நடித்திருந்தனர் . ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்திருந்த துப்புரவாளன் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். தற்போது துப்பறிவாளன் பாகம் இரண்டில் நடித்து வருகிறார் நடிகர் பிரசன்னா.

 மிஷ்கின் இயக்கத்தில் வெற்றி

மிஷ்கின் இயக்கத்தில் வெற்றி

அஞ்சாத படத்தில் நரேன், அஜ்மல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதில் வில்லனாக நடித்தவர் பிரசன்னா, இவர் நடித்த அஞ்சாதே திரைப்படம் வெற்றிக்கு பிறகு துணை கதாபாத்திரத்திலும் நடிக்க துவங்கினார் நடிகர் பிரசன்னா. மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த அஞ்சாதே மற்றும் துப்பறிவாளன் படங்கள் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

 பாராட்டவே இல்லை

பாராட்டவே இல்லை

சமீபத்தில் அஞ்சாதே படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரசன்னா, இதுகுறித்து அவர் கூறுகையில் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாள் முதல் ஷோவிற்கு தியேட்டரில் நான் சென்று ஆடியன்ஸ் எந்தெந்த சீன்களை எல்லாம் ரசிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தேன். எந்த சீனுக்கு எல்லாம் கைத்தட்டல் கிடைக்கும் என்று நான் நினைத்தேனோ, எந்த சீனுக்கு ரசிகர்கள் ரியாக்சன் செய்வார்கள் என்று நினைத்தேனோ அந்த ஒரு சீனுக்கு கூட ரசிகர்கள் கைதட்டவோ, எந்த ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவே இல்லை. அதை பார்த்து நான் மிகவும் ஷாக்காகி விட்டேன்.

 செருப்படி வாங்கும் போது

செருப்படி வாங்கும் போது

யாரும் என் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. அப்பொழுது மிகவும் கவலையாக இருந்தேன். ஆனால் படம் கடைசியாக கிளைமாக்ஸில் ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து நின்று கைதட்டியது அப்பொழுதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. இந்த ஒரு கைதட்டலுக்காகத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தேன். நரேன் வரும் சீனுக்கெல்லாம் கைத்தட்டலும், விசிலும் பறந்தது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. யாருக்குமே என்னை அடையாளம் கூட தெரியவில்லை. நான் செருப்படி வாங்கும் சீனுக்கு தான் தியேட்டரில் கைதட்டலும், விசிலும் பறந்தது. என்று கூறியுள்ளார் நடிகர் பிரசன்னா.அஞ்சாதே திரைப்படத்தில் இவர் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது. மேலும் வில்லனாக பிரசன்னாவை யாரும் யோசித்துக் கூட பார்த்திராத தருணத்தில் வில்லனாக இவர் நடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X