பயந்த பாலா.. இந்த வாரம் ஜெயிலுக்கு லீவ்.. ஜித்தன் ரமேஷையாவது புடிச்சு போட்டிருக்கலாமே பிக் பாஸ்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரையும் போரிங் போட்டியாளர் என தேர்வு செய்யவில்லை.
கடந்த இரு வாரங்களாக ஆரி போரிங் போட்டியாளர் என தேர்வு செய்யப்பட்டது நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பூகம்பங்களை வெடிக்கச் செய்தது.
இந்த வாரம் அனைவருமே நல்லா பர்ஃபார்ம் பண்ணாங்க என பிக் பாஸ் கூறி விட்டு எஸ்கேப் ஆகிட்டார்.

தலைவி சரி கிடையாது
நேற்றைய நிகழ்ச்சியின் புரமோவில் வந்த சீன்கள் மட்டுமே தமிழ் மொழி பேச வேண்டும் என்கிற சீன்கள் ஓடின. அதற்கு பிறகு தலைவி சம்யுக்தா அதனை பின்பற்றவும் இல்லை. மற்ற போட்டியாளர்களை பின் பற்ற வைக்கவும் இல்லை. அதனால், லக்சரி பட்ஜெட்டில் பிக் பாஸ் கை வைத்து விட்டார்.

மைக் மாட்டல
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நேரம் மைக்கை மாட்டிக் கொள்ளாமல் பாலாஜி பந்தா காட்டுவது, மைக்கை கழட்டி சனம் ஷெட்டியை அடிக்கப் போவது என ஏகப்பட்ட பில்டப்களை பண்ணிய நிலையில், அவருக்கு ஆப்பு வைக்கும் விதமாக லக்சரி பட்ஜெட்டில் பெரிய தொகையை பிக் பாஸ் காலி செய்து விட்டார்.

பாலாஜிக்கு பயம்
எங்கே நம்மை தான் போரிங் போட்டியாளர்னு சொல்லிடுவாங்களோ என்கிற பயம் பாலாஜி முருகதாஸுக்கு நல்லாவே வந்துடுச்சு, ஆனாலும், அந்த ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு தன்னை அப்படி சிறையில் அடைத்து விட முடியாது என்றும் சம்யுக்தாவிடம் பேசிக் கொண்டிருந்ததை பிக் பாஸ் கவனித்து விட்டார்.

ஜெயிலுக்கு லீவ்
வார வாரம் பிக் பாஸ் வீட்டில் போரிங் போட்டியாளர் என இருவரை கண்ணாடி சிறையில் அடைத்து விடுவார்கள். கடந்த இரு வாரங்களாக ஆரி கண்ணாடி சிறைக்கு சென்று விட்டு, இப்போதான் கேம் ஆடவே ஆரம்பித்து இருக்கிறார். இந்நிலையில், இந்த வாரம் எல்லாருமே நல்லா பர்ஃபார்ம் பண்ணீங்க என சொன்ன பிக் பாஸ், ஜெயிலுக்கு லீவு விட்டுட்டார்.

ஜித்தன் ரமேஷையாவது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அதிகமாக பர்ஃபார்ம் பண்ணாமல் இருந்த ஜித்தன் ரமேஷையாவது தனியாக சிறையில் அடைத்து விடுங்க பிக் பாஸ் என்றும், கூடவே சோகக் கடலில் ஆழ்ந்து விட்ட சுரேஷ் தாத்தாவையும் அனுப்பி வைங்க என்கிற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

அந்த பர்ஃபார்ம்
ஆனால், இந்த வாரம் ஜித்தன் ரமேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து கொண்டெ வேடிக்கை பார்ப்பது என்கிற சூப்பரான பர்ஃபார்மன்ஸை பண்ணி பல சூடான சண்டைகளையும், காமெடி காட்சிகளாக மாற்றி விட்டதால், குறிப்பாக சுண்டல் விற்றதால், சனம் ஷெட்டி கூட டான்ஸ் ஆடியதால், அவரும் இதில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.


Click it and Unblock the Notifications











