வசூல் கோட்டையில் சிக்கல்.. பின் வாங்கும் விநியோகஸ்தர்கள்.. புதிய பிரச்சினையில் பிகில் ரிலீஸ் !

பிகில் படத்தை வாங்க கேரள விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

Recommended Video

பிகிலுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. கடைசி நேரத்தில் என்ன ஆகுமோ!- வீடியோ

சென்னை: கேரளாவில் பிகில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் தயாராக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் 3வது முறையாக நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது.

பிகில் திரைப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் தீபாவளிக்கு படம் ரிலீசாவது கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் பிகில் படத்திற்கு மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் விஜய். கடந்த ஆண்டு வெளியான அவரது சர்க்கார் திரைப்படம் கேரளாவில் வசூல் மழை பொழிந்தது.

கேரள விநியோகம்

கேரள விநியோகம்

ஆனால் பிகில் படத்தை வாங்க கேரள விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை என கூறப்படுகிறது. பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கேரள விநியோக உரிமையை மினிமம் கேரண்டி அடிப்படையில் விற்க நினைக்கின்றனர். அப்படி வாங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என விநியோகஸ்தர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் சர்க்கார் படத்துக்கு அதே நிலை தான் ஏற்பட்டது.

நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

இதனால் கேரள விநியோக உரிமை முடிவாவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆனால் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் பிகில் படத்தை திரையிடுவதில் ஆர்வமாக உள்ளனர். காரணம் விஜய்க்கு அங்கிருக்கும் வர்த்தகம்.

பிகில் பட்ஜெட்

பிகில் பட்ஜெட்

பிகில் திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ளது. கிட்டதட்ட ரூ.180 கோடி அளவுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை எப்படியும் எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த வார இறுதியில் படத்தின் வர்த்தகம் சுமூகமாக முடிந்துவிடும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிகில் டிரெய்லர்

பிகில் டிரெய்லர்

இதற்கிடையே பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. டிரெய்லரை டிரெண்டிங்காக்க விஜய் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். டிரெய்லர் மட்டுமல்லாமல் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X