twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்த நொடி வரை மெர்சலுக்கு சான்று வழங்கப்படவில்லை!' - சென்சார் புது குண்டு

    By Shankar
    |

    சென்னை: விலங்குகள் நல வாரியம் ஆட்சேபணை இல்லா கடிதம் தராததால், இதுவரை மெர்சல் படத்துக்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை என சென்சார் அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார்.

    வெளியீட்டுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இன்னும் சென்சார் சான்று பெறாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No Censor certificate issued to Mersal, says official

    விஜய் நடித்துள்ள மெர்சல் படம் குறித்து தணிக்கை குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மெர்சலுக்கு ஆணையத்தின் தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே யுஏ சான்று எப்படி வழங்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளது.

    விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்திற்கு, தணிக்கை குழுவின் தலைவர் மதியழகன் அனுப்பியுள்ள பதிலில், "மெர்சல்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டதாக கூறப்படும் எந்த குற்றச்சாட்டையும் நான் கடுமையாக மறுக்கிறேன். தணிக்கைக் குழு06.10.2017 அன்று படத்தைப் பார்த்தது. விலங்குகள் நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்ற பிறகு தணிக்கை தரலாம் என்று அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த நொடி வரை படத்துக்கு தணிக்கை செய்யப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் வரவில்லை என்பதால் இன்னும் வெட்டப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்யவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    The reginal censor board has clarified that they haven't issued censor certificate so far to Mersal movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X