அது அப்பட்டமான பொய்.. விஜய்யின் ஜனநாயகன் சென்சார் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தணிக்கை வாரியம்!

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (CBFC) வெளியாகிவிட்டதாக பரவி வரும் செய்தி உண்மை இல்லை என தணிக்கை குழு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஜனநாயகன் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ந் தேதியே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், தணிக்கைக்குழுவில் ஏற்பட்ட கடுமையான சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் 5 நிமிடக் காட்சிகள் இணையத்தில் கசிந்து பரபரப்பைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து, படத்தின் 3 மணிநேர முழு நீளப் படமும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. விஜயின் கடைசி படம் என்பதால் இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்தது.

Jananayagan Censor Board Vijay
Photo Credit:

பொய்யான செய்தி: இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும், படத்தில் அரசியல் மற்றும் மிரட்டும் அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படம் என்பதால், தணிக்கைக் குழு மொத்தம் 13 இடங்களில் கத்தரி போட்டு தூக்கி உள்ளது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்ற அதீத கெட்ட வார்த்தைகளை முழுமையாக 'மியூட்' செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை () குறிப்பிட்ட காட்சிகளில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் சொட்டுவது, அடித்த அடியில் காது அறுபடுவது போன்ற கொடூரமான வன்முறைக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பின் போது ரௌடியின் கால் துண்டாகிப் பறப்பது போன்ற காட்சிகளை நீக்க தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 43 நொடிகள் காட்சிகள் வெட்டப்பட்டு இருப்பதாக இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியை தணிக்கை வாரியம் பொய் என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எப்படியும் ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

Read more about: jananayagan censor board vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X