தீபாவளி ரேஸுக்கு திட்டமிடும் விஜய்.. தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்க சான்ஸே இல்லை?

Recommended Video

Master - Kutti Story | Lokesh Kanagaraj | Anirudh Ravichandran | Thalapathy Vijay

சென்னை: தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், நிச்சயம் தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்க மாட்டார் என நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வருகிறது.

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற உள்ளதால், தளபதி 65 இயக்குநர் யார் என்பது குறித்த கேள்விகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

எகிறும் பிசினஸ்

எகிறும் பிசினஸ்

மாஸ்டர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் கடந்த மாதமே 200 கோடியை கடந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய்யை சுற்றி நடக்கும் சம்பவங்கள், குட்டி ஸ்டோரி பாடல் சக்சஸ் உள்ளிட்டவற்றால், மாஸ்டர் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே 300 கோடிக்கு பிசினஸ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், வசூல் எகிறும்

ஆனாலும், வசூல் எகிறும்

ஏஜிஎஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு, 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. ஆனால், 25 கோடியில் கார்த்தியின் கைதி படத்தை எடுத்து, 100 கோடி வசூலை சாத்தியமாக்கிய லோகேஷ் கனகராஜ், 75 கோடி பட்ஜெட்டில் மாஸ்டர் படத்தை உருவாக்கி வருகிறார். ஆனால், இதன் வசூல், பிகில் வசூலை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

தளபதி 65 இயக்குநர் யார்?

தளபதி 65 இயக்குநர் யார்?

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 10ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், தளபதி 65 படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வியும், இவர் தான் என்றும், இல்லை அவர் தான் என்றும் வதந்திகள் கிளம்பி வருகின்றன.

ஷங்கர் தான்

ஷங்கர் தான்

இப்படி விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் தான் இயக்கப் போகிறார் என்றும், இல்லை அருண் ராஜா காமராஜ் தான் என்றும், பாண்டிராஜ், கார்த்திக் தங்கவேல் என பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது.

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

தளபதி 65 படத்தை இயக்க இயக்குநர் ஷங்கர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஒரு வருஷம் அதற்காக டைம் கேட்டுள்ளாராம். இந்தியன் 2 படத்தில் பிசியாக இயங்கி வரும் ஷங்கர், அந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். நடிகர் விஜய், ஒரு வருட காலம் சும்மா இருக்க முடியாது என்றும், அடுத்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளதாக நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸ்

சம்மர் விடுமுறைக்கு மாஸ்டர் படத்தை மாஸாக இறக்க உள்ள நடிகர் விஜய், வரும் தீபாவளி ரேஸில் அஜித்தின் வலிமை படத்துடன் மோதவும் ரெடியாகி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தளபதி 65 படத்திற்காக கதைகளை கேட்டு வருவதாகவும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற அப்டேட்டும் கிடைத்துள்ளது.

ஷங்கருடன் தான்

ஷங்கருடன் தான்

அப்படியே தீபாவளி ரேஸ் மிஸ் ஆனாலும், பொங்கலுக்கு தளபதி விஜய்யின் 65வது படம் வெளியாகும் என தெரிகிறது. அந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி 66 படம் உருவாகும் என்ற பேச்சுக்களும் கோலிவுட் வட்டாரத்தில் பலமாக அடிபட்டு வருகிறது. நண்பன் படத்தை இயக்கிய ஷங்கர், தற்போது விஜய்க்காக செம மாஸ் ஆன ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X