Thalapathy 69: தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போகிறாரா?.. தீயாக பரவும் தகவல்.. நம்பலாமா?

சென்னை: ஏற்கனவே ஒப்பந்தமான இன்னொரு படத்தையும் முடித்து விட்டு முழு நேரம் அரசியலில் ஈடுபடுவேன் என நடிகர் விஜய் தனது அறிவிப்பில் தெளிவாக தெரிவித்து விட்டார். கோட் படம் என்று அவர் குறிப்பிடாத நிலையில், தளபதி 69 படத்தை தான் விஜய் குறிப்பிட்டுள்ளார் என அனைவரும் அந்த படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்வியை முன்னெழுப்பி வருகின்றனர்.

விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் விரும்பி வரும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் பெயரும் அடிபட்டு வந்தது. ஆனால், அவர் எல்லாம் இல்லைங்க வெற்றிமாறன் தான் இயக்கப் போறாரு என கடைசியாக ஒரு புரளி கிளம்பி உள்ளது.

No chances for Vetrimaaran to direct Vijays Thalapathy 69?

விடுதலை 2 ஓவர்: வெற்றிமாறன் விடுதலை முதல் மற்றும் 2ம் பாகத்தை முடித்து விட்டு ரோட்டர்டாம் பட விழாவில் அந்த படத்தை திரையிட்டுக் காட்டி கைதட்டல்களை அள்ளி உள்ளார். கூடிய விரைவில் விடுதலை 2 இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகி விடும் என தெரிகிறது. அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தான் இயக்கப் போகிறார் என கூறப்பட்டாலும் அங்கேயும் பெரிய சிக்கல் நிலவி வருகிறது.

வாடிவாசல் பக்கம் வருவாரா சூர்யா: இந்தியில் சூரரைப் போற்று படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து தயாரித்து அதில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யா கர்ணன் படத்தில் நடிக்கப் போகிறார் என்கின்றனர். மேலும், சுதா கொங்கராவின் புறநானூறு படமும் கைவசம் உள்ளது. கங்குவா படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், கர்ணன், புறநானூறு படங்களை முடித்து விட்டு சூர்யா வாடிவாசல் பக்கம் வர பல ஆண்டுகள் ஆகுமே என்கிற கேள்வி நிலவி வருவதால் வெற்றிமாறன் படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என கிளப்பி உள்ளனர்.

வாய்ப்பில்லை ராஜா: ஆனால், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தயாரிப்பில் விஜய் நடிக்கப் போகும் படத்தை தெலுங்கு இயக்குநர் தான் இயக்குவார் என்றும் வெற்றிமாறன் படத்தை விஜய் இயக்க மாட்டார் என்றும் நடிகர் விஜய் சில மாதங்களில் படப்பிடிப்பை முடிக்கக் கூடிய இயக்குநரை தேடி வரும் நிலையில், வெற்றிமாறனை நிச்சயம் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என்கிற ஸ்பீடில் தளபதி 69 உருவாகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X