அஜீத் ரசிகர் மன்றத்தை மீண்டும் துவங்கவில்லையாம்: இது விஷமிகள் வேலையாம்ப்பா!
சென்னை: அஜீத் குமார் ரசிகர் மன்றத்தை மீண்டும் துவங்குகிறார் என்ற செய்தி விஷமிகளின் வேலை என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார் தனது ரசிகர்கள் மன்றங்களை கடந்த 2011ம் ஆண்டு அதிரடியாக கலைத்தார். அவர் என்ன தான் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் ரசிகர்கள் அவரின் படம் ரிலீஸாகும்போது தங்கள் சொந்த செலவில் போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது என்று தூள் கிளப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

விஷமிகள்
அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்குவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அஜீத் மற்றும் அவரது ரசிகர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட விரும்பும் விஷமிகளின் வேலை.

ரசிகர்கள்
அஜீத் தனது ரசிகர்கள் தங்களின் மற்றும் தங்களின் குடும்பத்தாரின் நலன் குறித்து தான் முதலில் யோசிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தான் அவர் ரசிகர் மன்றத்தை கலைத்தார்.

முடிவில் மாற்றம்
அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்தது, கலைத்தது தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் மன்றத்தை மீண்டும் துவங்க ஆலோசிக்கவில்லை.

தல
அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











