என்னது திரெளபதி படத்துக்கு இப்படியொரு கதியா? நொந்துப் போன இயக்குநர்.. என்ன செஞ்சாரு தெரியுமா?

சென்னை: திரெளபதி படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த டிவியும் வாங்கவில்லை என இயக்குநர் ஜி. மோகன் போட்ட ட்வீட், ட்விட்டரில் மீண்டும் வரும் ரணகளத்தை உண்டாக்கி உள்ளது.

நாடக காதலை மையப்படுத்தி இயக்குநர் ஜி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீரா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்த திரெளபதி படம் கடந்த மாதம் இறுதியில் வெளியானது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், 18 நாட்களில் திரெளபதி படத்தின் ஓட்டம் நின்று போனது.

எந்த டிவியும்

இந்நிலையில், திரெளபதி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை எந்தவொரு டிவியும் வாங்க முன் வரவில்லை என்பதை வருத்தத்துடன் இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரெளபதி படத்தின் ஹெச்.டி பிரின்ட் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் திருட்டுத் தனமாக டவுன்லோடு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஜாதி சீரியல்

ஜாதி சீரியல்

திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன் போட்ட ட்வீட்டுக்கு கீழே, அவருக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் உடனடியாக ஆஜராகி பலவிதமான காரசார கமெண்ட்டுகளையும், சப்போர்ட் கமெண்ட்டுகளையும் செய்து வருகின்றனர். அதில், ஒரு நெட்டிசன், டிவி சீரியல் எவன் வாங்குவான், அவங்க கிட்டயே நிறைய சீரியல் இருக்கே, உங்க ஜாதி சீரியல் வாங்க ஒரு டிவிக்காரன் கூட முன் வரலை என பங்கமாக கலாய்த்துள்ளார்.

ரொம்ப கதறாத

ரொம்ப கதறாத

அந்த நெட்டிசனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "தயவு செய்து கதறுவதை நிறுத்தவும்.. அடுத்த திரைக்கதையிலும் மிரட்டலுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.. உடம்பை ரணகள படுத்தி கொள்ளாதீர்கள்.. #CoronaVirusUpdate படித்து பாதுகாப்பாக இருங்கள். அடுத்த படத்திற்கு விளம்பரம் செய்ய நீங்கள் தேவை.." என இயக்குநர் மோகன் பதிவிட்டுள்ளார்.

அந்த டிவி

அந்த டிவி

இயக்குநர் மோகன் போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு, பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களையும், ஆபாசமான கமெண்ட்டுகளையும், செய்து வருகின்றனர். மேலும், திரெளபதி படத்திற்கு ஆதரவு அளித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இயக்கி வரும் அந்த டிவி கூடவா திரெளபதி படத்தை வாங்கல என கலாய்த்தும் வருகின்றனர்.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

திரெளபதி படத்தை எந்த டிவியும் காசு கொடுத்து வாங்காத நிலையில், அமேசான் பிரைமில் திரெளபதி படத்தை இயக்குநர் மோகன் விற்றுள்ளார். ஆனால், திரெளபதி படத்தை பார்க்க எந்த ஒரு கட்டணும் கட்ட தேவையில்லை என்ற அறிவிப்போடு திரெளபதி திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. அதையும் இயக்குநர் மோகன் கருத்துக்கு எதிரானவர்கள் ஓட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X