பாட்ஷாவுக்கு எதுக்கு பார்கோட்.. சும்மா சர்ருன்னு உள்ளே போன ரஜினி கார்.. எப்பவுமே ஸ்பெஷல் தான்!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Recommended Video

No Checking for Super Star Rajinikanth at Nayanthara and Vignesh Shivan Wedding

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஐபிக்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பார்கோட் சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவர்களது செல்போன் வாங்கி சேஃபாக லாக்கரில் வைக்கப்பட்டது.

ஆனால், நடிகர் ரஜினிகாந்தின் கார் எந்தவொரு தடையுமின்றி சர்ருன்னு ஷெரட்டன் பார்க் ஹோட்டலுக்கு சென்றதாகவும் அவரிடம் எந்தவொரு செக்கிங்கும் செய்யவில்லை என சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் பங்கேற்பு

ரஜினிகாந்த் பங்கேற்பு

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்வி நேற்று சமூக வலைதளத்தில் எழுந்தது. மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா பரவல் காரணமாக ரஜினிகாந்த் பங்கேற்பதில் சந்தேகம் என்றும் சிலர் கூறினர். ஆனால், கொடுத்த வாக்கை கடைபிடிக்கும் விதமாக கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

விஐபிக்களுக்கும் செக்கிங்

விஐபிக்களுக்கும் செக்கிங்

மகாபலிபுரத்தில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற திருமணத்தை ஷாதி ஸ்குவாட் எனும் திருமண ஏற்பாட்டாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தி உள்ளனர். இதுவரை மணமக்களின் ஒரு புகைப்படம் கூட லீக் ஆகவில்லை. அந்தளவுக்கு விஐபிக்களுக்கும் கடுமையான செக்கப் இருந்தது.

பாட்ஷாவுக்கு பார்கோடா

பாட்ஷாவுக்கு பார்கோடா

ஆனால், விவிஐபி லிஸ்ட்டில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் நேரடியாக திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் சர்ரென வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாட்ஷாவுக்கு எதுக்கு பார்கோட் என கமெண்ட் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ஜோடி

சூப்பர்ஸ்டார் ஜோடி

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதன் பிறகு குசேலன் படத்தில் ஹீரோயினாகவே வந்து சென்றார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு ரிலீசான தர்பார் உள்ளிட்ட படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

அந்த சிரிப்பு

அந்த சிரிப்பு

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் கார் கண்ணாடியை கூட இறக்காமல் படு சீக்ரெட்டாக திருமண விழாவில் கலந்து கொண்டனர். சில பிரபலங்கள் மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்நிலையில், கார் விண்டோவை இறக்கி மீடியாவுக்கு வணக்கம் வைத்து தனக்கே உரிய சிரிப்பையும் சிரித்து விட்டு ரஜினிகாந்த் உள்ளே சென்ற வீடியோக்களும், புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X