twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மே 31 வரை எந்த படப்பிடிப்பும் இல்லை.. உச்ச நட்சத்திரங்கள் உதவ வேண்டும்.. ஆர்கே செல்வமணி கோரிக்கை!

    |

    சென்னை: மே 31ஆம் தேதி வரை எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Serial படபிடிப்பு தளத்தில் 30ல் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Rk Selvamani Pressmeet

    கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் உச்சத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இது தாங்க உண்மையான நட்பு.. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று வசந்தபாலனை சந்தித்த லிங்குசாமி!இது தாங்க உண்மையான நட்பு.. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று வசந்தபாலனை சந்தித்த லிங்குசாமி!

    இதேபோல் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

     சினிமா நட்சத்திரங்கள் பலி

    சினிமா நட்சத்திரங்கள் பலி

    சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, பாடகர் கோமகன் உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    இதேபோல் தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், சேலம் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதுமே முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

     மே 31வரை ஷூட்டிங் இல்லை

    மே 31வரை ஷூட்டிங் இல்லை

    அப்போது பேசிய அவர், மே 31ஆம் தேதி வரை சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். 16 சீரியல்களின் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெறுகிறது என்றும் அதுவும் நாளை முதல் நிறுத்தப்படும் என்றும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

    உயிரிழப்பு அதிகம்

    உயிரிழப்பு அதிகம்

    கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் சினிமா பிரபலங்கள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ள ஆர்கே செல்வமணி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக கூறினார்.

    அஜித் நிதியுதவி

    அஜித் நிதியுதவி

    மேலும் சினிமா தொழிலாளர்களை காக்க உச்சத்தில் உள்ள நடிகை நடிகர்கள் உதவ முன் வரவேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடிகர் அஜித் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாகவும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

    English summary
    No Cinema and Serial shooting will be there till May 31st says Fefsi president RK Selvamani. RK Selvamani requesting top stars to help fefsi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X