Lal Salaam: கணவருடன் போட்டிப் போட மனமில்லாமல் ஒதுங்கினாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? எஸ்கே தான் பாவம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், இந்த ஆண்டே ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், கடைசியில் தற்போது இந்த ஆண்டு வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை லால் சலாம் டார்கெட் செய்துள்ளது.

கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த முறை கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக லால் சலாம் படத்தை களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் போட்டி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
டபுள் ட்ரீட் இல்லை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படும் நிலையில், லால் சலாம் படமும் இந்த ஆண்டு வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி, அயலான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து லால் சலாம் படமும் அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் என்கிற ஷாக்கிங் அப்டேட் வெளியாகி உள்ளது.
கேப்டன் மில்லருக்கு பிரச்சனை இல்லை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லால் சலாம் போட்டியாக வருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டன் மில்லருக்கு கேட் போட யாருமில்லை என்பது தனுஷ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
போட்டி போடலையா: கணவர் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராக மாறியுள்ள நிலையில், கணவரை எதிர்த்து போட்டி போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து நைஸாக பின் வாங்கி விட்டாரா? என தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்: ஏற்கனவே இந்த ஆண்டு ஜெயிலர் பட ரிலீஸ் காரணமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அயலான் படத்தை பொங்கல் ரிலீஸாக சிவகார்த்திகேயன் அறிவித்த நிலையில், தற்போது லால் சலாம் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் அயலான் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் மாற்றுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











