அஜித்துடன் மோதலை தவிர்க்கப் போகிறாரா சியான் விக்ரம்?.. வீர தீர சூரன் ரிலீஸ் இந்த தேதியிலா?
சென்னை: வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதியது.
அதன் பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் இந்த ஆண்டு வெளியாகாத நிலையில், அடுத்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்துடன் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் மோத காத்திருக்கிறது. இந்நிலையில் சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என்பது சந்தேகம்தான் என்கின்றனர்.
விடாமுயற்சி பொங்கல்: தமிழ் சினிமாவை பொருத்தவரை வரும் பொங்கல் பண்டிகை விடாமுயற்சி பொங்கலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம் சேஞ்சர் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தாலும் தெலுங்கு படமாகவே அது கருதப்படும். மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.
விடாமுயற்சி vs வீரதீர சூரன்: அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் சீயான் விக்ரமின் வீர தீர சூரன் மோதும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கே விக்ரமின் தங்கலான் திரைப்படம் வெளியாகாமல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்துக்கு வெளியானது. அதேபோல அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தான் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகும் என்றும் விடாமுயற்சியுடன் விக்ரம் படம் மோதாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலா படமும் வருது: அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் பாலா இயக்கிய வணங்கான் படமும் வெளியாகவுள்ள நிலையில், பாலா படத்துடனும் விக்ரம் மோத விரும்பவில்லை என்பதே முக்கிய காரணம் என்கின்றனர். அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் அஜித் படத்துடன் மோத ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்லோவான சூர்யா 44: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள சூர்யா 44 திரைப்படம் பொங்கலுக்கு வருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் மேலும் பல மாதங்கள் தாமதமாகி வெளியாகும் என்று கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு தனது அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுப்பதற்காக பெரும் முயற்சிகளை சூர்யா எடுத்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











