RRR படத்துடன் மோதல் இல்லை.. ஒரே அடியாக ஓடிப் போகும் டான்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதே தேதியில் லைகா நிறுவனம் சார்பில் RRR திரைப்படம் தமிழில் வெளியாகிறது.

அதன் காரணமாக லைகா தயாரிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படம் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற தகவல் கசிந்துள்ளது.

மார்ச் 25

மார்ச் 25

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இயக்குநர் ராஜமெளலியின் RRR படமும் அதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எப்படி லைகா சம்பந்தப்பட்டுள்ள இரு படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

டீசர் கூட வரல

டீசர் கூட வரல

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. அப்போது டான் திரைப்படத்தின் டீசர் அல்லது அயலான் படத்தின் டீசர் என ஏதாவது ஒரு அப்டேட் வருமா என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. டான் படத்தில் இருந்து இதுவரை ஜலபுலஜங் மற்றும் பே என இரு பாடல்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.

ஒரேயடியாக ஓட்டம்

ஒரேயடியாக ஓட்டம்

மார்ச் 25ம் தேதி டான் திரைப்படம் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டான் திரைப்படம் ஏப்ரல் மாதம் கூட வெளியாகாது என்றும் ஒரேயடியாக மே மாதம் தான் படம் வெளியாக போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதம் பீஸ்ட், கேஜிஎஃப் 2, விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், கமலின் விக்ரம் என பல படங்கள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில், ஏப்ரல் வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போ பொன்னியின் செல்வன்

அப்போ பொன்னியின் செல்வன்

லைகா தயாரிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் இப்போதைக்கு வெளியாகாது என தெளிவாகி உள்ளது. மேலும், வரும் மே மாதம் கூட அந்த படம் வெளியாகாது என்றும் டான் படம் மே மாதம் ரிலீசாகும் நிலையில், ஆயுதபூஜை அல்லது தீபாவளிக்கு பொன்னியின் செல்வன் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X