ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான் இறக்கும் போது அவரது உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவரது முன்னாள் மேனேஜர் திஷா சலியான், மும்பையில் உள்ள தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது இறப்புக்கு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இரங்கல் தெரிவித்து இருந்தார். பின்னர், அவரும் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை கிளப்பியது.

திஷா சலியான்

திஷா சலியான்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜரான திஷா சலியான், கடந்த ஜூன் 8ம் தேதி திடீரென தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இரு தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை

இரு தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை

மேனேஜர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு வார காலத்திற்குள் ஜூன் 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், இரு தற்கொலைக்கும் சம்பந்தமே இல்லை என மும்பை போலீசார் அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

மீடியாவை விளசிய நடிகர்

மீடியாவை விளசிய நடிகர்

திஷா சலியானின் தற்கொலையில் பாலிவுட் நடிகரான சூரஜ் பஞ்சோலிக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், சமூக வலைதளங்களில் செய்தி சேனல்களையும் அவர் விளாசித் தள்ளினார். தனது வாழ்க்கையில் திஷா சலியானை ஒரு முறை கூட சந்தித்தது இல்லை என்றும், தான் பார்ட்டி செய்வதாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது தனது தோழி என்றும் அது திஷா கிடையாது என்றும் கூறியிருந்தார்.

ஒட்டுத் துணி கூட இல்லை

ஒட்டுத் துணி கூட இல்லை

இந்நிலையில், திஷா சலியான் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்த போது அவரது உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்று பரவி வருகிறது. அர்னாப் உள்ளிட்ட பலர் அந்த தகவலை உறுதி படுத்தி வருகின்றனர். மேலும், திஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறுதி வீடியோ

இந்நிலையில், திஷா சலியான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரவு நேரத்தில் தனது வருங்கால கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நிறைய மது அருந்தி போதையில் அவர் ஆடும் வீடியோ பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

திஷா சலியான் தற்கொலைக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. மது அருந்திய நிலையில், தனது பால்கனியில் இருந்து விழுந்து அவர் எதிர்பாராத விதமாக இறந்தாரா? அல்லது திஷாவை கொலை செய்துள்ளனரா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X