'நோ கமெண்ட்ஸ்': ரஜினி மீது அவ்வளவு காட்டம் ஏன்?
சென்னை: சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத ரஜினி மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்கு வரும் வேலையில் ஈடுபட்டுள்ள ரஜினி சினிமா படங்களில் பிசியாக உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் 3வது கட்ட படப்பிடிப்புக்காக லக்னோ கிளம்பிச் சென்றுள்ளார்.
பட வேலைகளுக்கு இடையே சென்னை திரும்பி வரும்போது அரசியல் பணிகளை கவனிக்கிறார்.

தமிழிசை
பாசிச பாஜக அரசு ஒழிக என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு கோஷமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சோபியா கைது விவகாரம் குறித்து தமிழகம் மட்டும் அல்ல தேசிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஜனநாயக நாட்டில் கோஷமிட கூட உரிமை இல்லையா என்று நாடு முழுவதும் விவாதம் நடந்தது.

பரபரப்பு
நாடே பரப்பரப்பாக பேசிய சோபியா விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கருத்து சொல்ல மாட்டார் பாரேன் என்று பலரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்னது போன்றே ரஜினி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இப்படி பரபரப்பான விஷயங்கள் பற்றி கூட கருத்து தெரிவிக்க தயங்கும் இவர் எப்படி நாளைக்கு துணிச்சலுடன் செயல்படுவார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கருத்து
இப்ப ரஜினி கருத்து தெரிவித்து என்ன நடக்கப் போகிறது. சும்மா அவரை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவிக்க மறுத்ததை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என ரஜினி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிப்பதும், தெரிவிக்காததும் தனி மனிதனின் விருப்பம் என்பது ரஜினி ஆதரவாளர்களின் பாயிண்ட். அவர்கள் சொல்வதும் சரியே. அவர் கருத்து சொல்லி என்ன நடக்கப் போகிறது.
கஸ்தூரி
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். #MemeKast #Rajini என்று நடிகை கஸ்தூரி கூட ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











