Vijay Son Sanjay-விஜய்யோடு பேசுவதே இல்லை சஞ்சய்..அவருக்கு தாத்தாவின் சப்போர்ட் இருக்கிறது -அந்தணன் ஓபன் டாக்

சென்னை: Vijay Son Sanjay (விஜய் மகன் சஞ்சய்) விஜய்யோடு அவரது மகன் சஞ்சய் பேசுவதே இல்லை என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் ஃபேமஸான நடிகராக இருப்பதால் சஞ்சய்யும் நடிகராக வலம் வருவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநராக வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதனையடுத்து கனடா மற்றும் லண்டனில் அவர் அதுதொடர்பாக படிக்கவும் செய்தார்.

No Communication With Vijay And His Son Sanjay Says Anthanan

குறும்படம்: படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய்; புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது. எனவே விரைவில் இயக்குநராக அறிமுகமாகி விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

லைகாவுடன் கூட்டணி: இந்தச் சூழலில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். லைகா நிறுவனம் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும் பலரிடம் பலமாக எழுந்திருக்கிறது. விஜய் சேதுபதியோ இல்லை ஜீவாவோ நடிக்கலாம் என கூறப்படுகிறது.

விஜய்க்கு தெரியாது?: இதற்கிடையே சஞ்சய் இயக்குநர் ஆகப்போகிறார் என்ற அறிவிப்பு வரும்வரை அவர் செய்த மூவ்கள் பற்றி விஜய்க்கு தெரியாது என்று ஒரு தகவல் ஓடியது. மேலும் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால் அவர் தனது மகன் மற்றும் மகளுடன் லண்டனுக்கு சென்றுவிட்டார். தமிழ்நாடு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

No Communication With Vijay And His Son Sanjay Says Anthanan

அந்தணன் பேட்டி: இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டின் ஒன்றில், "விஜய்க்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் சஞ்சய் இயக்குநர் ஆவது விஜய்க்கு தெரியாது என்பது உண்மை. சஞ்சய் தனது தாயுடன் லண்டனில் இருக்கிறார். லண்டனில் இருக்கும் அவரது தாத்தா பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார். லைகா சுபாஸ்கரனும், அவரும் நண்பர்கள்.

எனவே அவரேக்கூட நேரடியாக சுபாஸ்கரனிடம் பேசி தம்பியை வைத்து படம் செய்யுங்கள் என சொல்லியிருக்கலாம். அவரது சப்போர்ட் சஞ்சய்க்கு இருக்கிறது. அதேபோல் இந்தப் பக்கம் இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரின் சப்போர்ட்டும் சஞ்சய்க்கு உண்டு" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X