96 படம் ஆட்டோகிராஃபின் தழுவலா?: சேரன் என்ன சொல்கிறார்?
சென்னை: 96 படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குனர் சேரன்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. அமெரிக்காவிலும் படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சேரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சேரன்
96 படத்தை பார்க்கத் துவங்கியபோதே ட்வீட்டினார் சேரன். மெல்லிய காதலை சொல்வதில் சேரன் வல்லவர் என்று பெயர் எடுத்தவர். அதனால் 96 படம் பற்றிய அவரின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
விஜய் சேதுபதி
96 படத்தில் ஆட்டோகிராப் சாயல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒருவர் சேரனிடம் கேட்க அவரோ, அது அந்த பள்ளிக்கூட பகுதிகள் இருப்பதால் அப்படி தெரியுது.. மற்றபடி அதை தவிர்த்து பார்த்தால் இது முற்றிலும் வேற...என்று பதில் அளித்துள்ளார்.
பிரேம் குமார்
தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான படம் 96.. ஆட்டோகிராப்பையும் 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம்..அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள்.இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்..
Hatsoff to premkumar..என்று தெரிவித்துள்ளார் சேரன்.
த்ரிஷா
விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார்... இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் என்கிறார் சேரன்.


Click it and Unblock the Notifications











