கொரோனா கவலை இல்லை.. பிகினியில் பர்த்டே கொண்டாடிய நடிகை.. மாஸ்க் போடாம லிப் கிஸ் வேற!
சென்னை: பீட்சா, காஞ்சனா 2, காதலில் சொதப்புவது எப்படி, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பூஜா ராமசந்திரன், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கொரோனா அச்சம் காரணமாக வெளி இடங்களில் மக்கள் தேவையற்று அலைய வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில், பூஜா ராமசந்திரனின் கணவர், பிகினியுடன் லிப் கிஸ் அடித்துக் கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜே
எஸ்.எஸ். மியூசிக் சேனலின் பிரபல வீஜேவாக வலம் வந்த பூஜா ராமசந்திரன், ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்த நிலையில், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன் டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

விவாகரத்து
எஸ்.எஸ். மியூசிக்கில் பிரபல விஜேவாக இருந்த கிரெய்க் கேலியாட்டை காதலித்து வந்த பூஜா ராமசந்திரன், 2010ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 7 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, கிரெய்கை விவாகரத்து செய்த பூஜா, ஜான் கொக்கன் எனும் நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பிகினியில் பிறந்தநாள்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகளவில் மக்கள் பயந்து நடுங்கிப் போயுள்ள நிலையில், நடிகை பூஜா ராமசந்திரன், மாலத்தீவில் தனது கணவருடன் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். 1984ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி பிறந்த பூஜா, இன்று தனது 36வது பர்த்டேவை பிகினியில் செக்ஸியாக செலிபிரேட் செய்துள்ளார்.
ஒயின் மாதிரி
எப்படி ஒயின் பழசாக பழசாக ருசிக்குமோ, அதே போல உனக்கு வயசாக வயசாக அழகாய் மாறிக் கொண்டே வருகிறாய், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு படியாக உன் மீது எனது காதல் வளர்ந்துக் கொண்டே போகிறது, என வார்த்தைக்கு வார்த்தை வர்ணித்தபடி, பூஜா ராமசந்திரனுடன் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜான் கொக்கன் பதிவிட்டுள்ளார்.

மாஸ்க் போடாம லிப் கிஸ்
புதுசா கல்யாணமான நித்யா ராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள், தங்கள் கணவர்களுக்கு, மாஸ்க் போட்டபடி தான் முத்தமே கொடுக்கின்றனர். ஆனால், பூஜா ராமசந்திரன், தனது கணவனுக்கு சன் ஷில்லவுட்டில் ரொமான்டிக்காக லிப் லாக் அடித்த புகைப்படத்தையும் பூஜாவின் இரண்டாவது கணவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











