ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், பிரசாந்த், சந்தானம், யோகி பாபு, ஹரிஷ் கல்யாண் என தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களும் நேற்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
படப்பிடிப்புக்காக செல்கிறேன் என்றும் வெளிநாட்டில் படப்பிடிப்பு என்று வராமல் தவிர்க்கவோ விரும்பவில்லை. நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பெண் இயக்குநர்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், கிருத்திகா உதயநிதி என அனைவருமே ஓட்டுக்களை போட்டுள்ளனர். நடிகர் சூரிக்கு மட்டும் ஓட்டுப் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வருத்தத்தை அவர் பதிவு செய்திருந்தார்.

அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் வாக்கு செலுத்த வருகை தந்த போது பெரும் கூட்டம் அலைமோதியது. ஆனால்,சூர்யாவுடன் வந்த அவரது தம்பி கார்த்தியை பெரிதாக யாரும் கண்டுக்கொள்ளாதது சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
களைகட்டிய தேர்தல்: அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் மக்களவை தேர்தலுக்கு பெரிதும் ஆர்வம் காட்டி வாக்குகளை செலுத்தினர். வழக்கம் போல சென்னையில் வாக்குப்பதிவு 40 சதவீதம் குறைவாகவே பதிவானது. இத்தனைக்கும் பல முன்னணி நடிகர்கள் சென்னையில் ஓட்டுப் போட்டு தங்கள் ரசிகர்களுக்கு அறிவுறுத்திய நிலையிலும் பலர் ஓட்டுப் போட வரவில்லை. பிற மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எந்த குறியீடும் வேண்டாம்: கருப்பு சட்டை, சிகப்பு சட்டை, மஞ்சள் சட்டை, நீலச் சட்டை, பச்சை சட்டை என எதை அணிந்து வந்தாலும் விஜய் ஆண்டனி மைக்கை நான் தான் பிடிப்பேன் என சொன்னதும் அவர் சீமானுக்குத்தான் ஓட்டுப் போட்டார் என டீகோடிங் செய்தது போல ஆகிவிடக் கூடாது என்பதற்காக ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் வெள்ளை சட்டை அணிந்து வந்தே தங்கள் வாக்கினை செலுத்திச் சென்றனர்.
பாவம் சார் விஜய்: கேரளாவில் காரில் சென்றாலும் ஒரு இன்ச் தளபதி விஜய்யை நகர விடமாட்றாங்க ரசிகர்கள். நீலாங்கரையில் வாக்கு செலுத்த போனாலும் காரில் இருந்து வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு கூட விடாமல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், கொஞ்சம் ஓட்டுப் போட விடுங்க நண்பா என விஜய் கெஞ்சும் நிலைமை எல்லாம் ஏற்பட்டது. தவெக தலைவரான நிலையில், விஜய் தனது வாக்கினை செலுத்த ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு வந்து உடனடியாக ஓட்டுப் போட்டு சென்றது ரசிகர்களை ஊக்கப்படுத்தியது.

அண்ணன் கூட தான் வருவேன்: நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை தனியாக ஓட்டுப் போட சொன்னதாகவும், ஆனால், தனது அண்ணன் சூர்யாவுடன் தான் வருவேன் என கார்த்தி அடம்பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகுமார், கார்த்தி ஓட்டுப் போட்டு வந்த போது அவர்களை பெரிதாக எந்தவொரு கூட்டமும் சூழ்ந்து கொள்ளவில்லை.
சூர்யாவுக்கு குவிந்த கூட்டம்: ஆனால், நடிகர் சூர்யா ஓட்டுப்போட்டு வந்த உடனே ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் சூர்யாவை சூழ்ந்து கொண்ட காட்சிகள் தற்போது வெளியான நிலையில், ஜப்பான் படம் தோல்வியை தழுவிய எஃபெக்ட் தான் கார்த்தியை யாரும் கண்டுக்கொள்ளாமல் போக காரணம் என ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











