அச்சச்சோ 96ல் கிடைத்த ‘சந்தோசம்’ சீதக்காதியில் கிடைக்காதாமே!
சீதக்காதி படத்தில் எந்தவொரு காட்சியும் நீக்கப்படவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதியின் '96' படத்தில் கிடைத்த ஒரு விஷயம், சீதக்காதி படத்தில் இருக்காது என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் திரிஷாவுடன் நடித்த 96 படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் திரிஷாவின் சுடிதார் உள்பட பல விஷயங்கள் ஹிட்டாயின. இதனால் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.
அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூபில் டிரெண்டிங்கானது. ஆனால் இந்த வாய்ப்பு சீதக்காதி படத்தில் கிடைக்காது. ஏனென்றால் இந்த படத்தில் எந்த காட்சியும் நீக்கப்படவில்லையாம்.
சென்னையில் இன்று நடைபெற்ற சீதக்காதி படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் எடிட்டர் கோவிந்த் இதனை தெரிவித்தார். அதேபோல், படத்தில் எந்த ஒரு காட்சிக்கும் டப்பிங் செய்யாமல், லைவ் சவுண்ட் பதியப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











