தனுஷ் வேண்டவே வேண்டாம்.. ஜெயிலர் 2வில் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நாளை முதல் மீண்டும் நடிக்கப் போகிறார் என்றும் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் அதற்கான செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் அக்டோபர் 15ம் தேதி முதல் கூலி படத்தில் இணைவார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், ரஜினிகாந்திற்கு மேலும், சில நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிய நிலையில், மேலும் ஒரு வாரம் ஓய்வெடுத்துள்ளார்.

நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் திடீரென தீயாக பரவிய நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தனுஷ் - ஐஸ்வர்யா சேர்வார்களா?: விவாகரத்து வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தள்ளிப் போட்டு வரும் நிலையில், இருவரும் மனம் மாறிவிட்டார்களா? மீண்டும் இணைந்து வாழ்வார்களா? என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. தனுஷ் இட்லி கடை, குபேரா, இளையராஜா என ரொம்பவே பிசியாக இருப்பதால் தான் நீதிமன்றத்துக்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார் என்றும் மறுபடியும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
ஜெயிலர் 2வில் தனுஷ் இல்லை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் அடுத்ததாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதற்காக எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை என்கின்றனர். இந்நிலையில், தனுஷ் அந்த படத்தில் நடிக்கப் போவதாக வெளியான தகவல்கள் எல்லாம் வதந்திகள் தான் என்றும் ரஜினிகாந்த் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் நெல்சனும் ரஜினிகாந்தை கடுப்பேற்றும் வகையில் அப்படியொரு ஆப்ஷனை கூட முன் வைக்க மாட்டார் அவர் ரொம்பவே உஷாரான நபர் என்றும் கூறுகின்றனர்.
காத்திருக்கும் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம் சீக்கிரமே முடிந்து விடும். அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக மற்ற எந்தவொரு படத்திலும் கமிட் ஆகாமல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்துக் கொண்டே காத்திருக்கிறார் நெல்சன். ஆனால், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியவே அடுத்த ஆண்டு சம்மர் வரை ஆகிவிடும் என்றும் கூறப்படும் நிலையில், ஜெயிலர் 2 ஆரம்பிக்க மேலும், தாமதமாகும் என்கின்றனர். இடையே பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவும் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
தனுஷ் பயங்கர பிஸி: இட்லி கடை படத்தை இயக்கி வரும் தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பட வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா எனும் படத்தையும் ஆரம்பித்து அப்படியே பாதியில் விட்டு விட்டு தனது படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் தனுஷ். அந்த படத்தின் பணிகளையும் முடிக்க வேண்டிய சூழலில் தனுஷ் புதிததாக எந்த படத்திலும் கமிட் ஆக வாய்ப்பே இல்லை என்றும் அண்ணன் செல்வராகவனும் தனுஷுக்காக தொடர்ந்து கொக்கிப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











