சத்தமே இல்லாமல் மிரட்டும் சைக்கோ.. தமிழ் ரசிகர்களை மிரட்ட இன்னொரு ராட்சசன் வருகிறான்!
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சைக்கோ கொலைகாரர்களை பற்றிய பல படங்கள் உலகளவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன.
சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படமும் தமிழ் ரசிகர்களை பயங்கரமாக மிரட்டி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தது.
இந்நிலையில், மிஷ்கினின் சைக்கோ விரைவில் மிரட்ட காத்திருக்கிறது.
சைக்கோ டிரைலர் ரிலீஸ்
சைக்கோ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து சைக்கோ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சைக்கோ டிரைலரை வெளியிட்டுள்ளார்.

சைக்கோ
டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம் புலி நடிப்பில் உருவாகி வரும் சைக்கோ திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருகிறது.
டிரைலர் எப்படி இருக்கு?
டீசரை போலவே டிரைலரிலும் வசனங்கள் எதுவுமே இல்லை. இளையராஜாவின் பி.ஜி.எம் மட்டுமே டிரைலர் முழுக்க நிறைந்து காட்சிக்கு காட்சி மிரட்டுகிறது. பார்வை தெரியாத நாயகன் உதயநிதி ஸ்டாலின் எப்படி படுமோசமான சைக்கோ வில்லனிடம் இருந்து தனது காதலியான அதிதி ராவை காப்பாற்றுகிறார் என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு சைக்கோ உருவாகியுள்ளது டிரைலரில் கணிக்க முடிகிறது.

ராட்சசன் அளவுக்கு இருக்குமா?
மிஷ்கினின் சைக்கோ படம் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், நான் சரவணன் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் அளவுக்கு இருக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ராட்சசன் படம் அளவுக்கு இருந்தால் மட்டுமே இந்த சைக்கோ தமிழ் ரசிகர்களை மிரட்டுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோக்கர் இஸ்பிரேஷன்
ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சைக்கோ படத்தின் சில காட்சிகள் ஜோக்கர் படத்தின் இன்ஸ்பிரேஷன் போல தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த காட்சி தெறிக்கவிடும்
டிரைலரில் இடம்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் இந்த காட்சி நிச்சயம் தியேட்டரில் தெறிக்கவிடும் என உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிரெண்டிங்
சைக்கோ டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், #PsychoTrailer ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள், மிஷ்கின் இயக்கத்தையும், ராஜா சார் இசையையும் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
பீத்தோவன் இசை
டிரைலர் முழுவதும் பீத்தோவன் இசை ரசத்தை இளையராஜா கலந்து கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மிரட்டுகிறது
டிரைலரில் அதிதி ராவ் வரும் காட்சிகள், மண்டையோடுகள் அடுக்கி இருக்கும் காட்சிகள், ரத்தத்தை துடைக்கும் காட்சிகள் என பல காட்சிகள் மிரட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications











