»   »  கமர கட்டு... இதுல மது, சிகரெட் காட்சிகளே இல்லீங்க!- இயக்குநர்

கமர கட்டு... இதுல மது, சிகரெட் காட்சிகளே இல்லீங்க!- இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி நல்ல பெயரைப் பெற்ற 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை தொடர்ந்து ரேவ்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கமர கட்டு'.

இப்படத்தில் சாட்டை யுவன், கோலிசோடா ஸ்ரீராம், லக்ஷாராஜ், மனீஷா ஜித் நடித்துள்ளனர்.


எஸ்.ஏ.சி.ராம்கி இதனை இயக்கியுள்ளார். இவர், எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர். படத்தின் அனைத்து பணிகளும் முடிவைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.


என்ன கதை?

என்ன கதை?

பள்ளி கல்வியை முடித்து கல்லூரிக்கு போகும் போது மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள், அவர்களுக்கான தடுமாற்றம், அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இப்படத்தின் கதை.


ரொம்ப நல்லாருக்கு, இந்தாங்க அடுத்த படம்

ரொம்ப நல்லாருக்கு, இந்தாங்க அடுத்த படம்

கமர கட்டு படம் ரொம்ப நன்றாக வந்திருப்பதாக தயாரிப்பு தரப்பு ராம்கி ராமகிருஷ்ணனை பாராட்டியதோடு, இந்தாங்க பிடிங்க அடுத்த படவாய்ப்பு என இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.


குடி, புகை கிடையாதுங்க

குடி, புகை கிடையாதுங்க

படம் குறித்து ராம்கி ராமகிருஷ்ணன் கூறுகையில், "மாணவர்களை தவறாக சித்தரிக்கும் ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது. சிகரெட் புகைப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் ஏதும் இன்றி உருவாக்கப்பட்டுள்ள 'கமர கட்டு', படத்தின் படப்பிடிப்பின் போதே, பல வித்தியாசமான அனுபவங்களை நாங்கள் சந்தித்தோம்.


மே முதல் நாள்

மே முதல் நாள்

படம் வெளியான பிறகு அதே வித்தியாசமான அனுபவத்தை இப்படம் கொடுக்கும். தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். மே முதல் நாள் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


English summary
Ramki Ramakrishnan's upcoming movie Kamara Kattu is based on school backdrop without any drinking or smoking scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil