சமந்தா ரசிகர்களுக்கு 'இரும்புத்திரை' கொடுத்த பெரும் ஏமாற்றம்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஆதார் தகவல் திருட 500 ரூ போதும் - இரும்புத்திரை - விமர்சனம் | Selfie Kulfie | Irumbuthirai Review

சென்னை : விஷால், சமந்தா நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இன்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் டிஜிட்டல் வளர்ச்சியின் எதிர்மறை விளைவுகள் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

'இரும்புத்திரை' படத்தின் புகைப்படங்கள், பாடல்கள், வீடியோக்கள் என அனைத்திலும் ஹீரோயின் சமந்தா ரசிகர்களை அதிகமாக ஈர்த்தார். படத்தில் அவரது க்யூட்டான காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

No duet songs in Irumbuthirai movie

சமீபத்தில் யூ-ட்யூபில் வெளியிடப்பட்ட 'அழகே..' பாடலின் வீடியோவில் செம அழகாக இருந்தார் சமந்தா. திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளியாகியிருக்கும் இப்படம் சமந்தா ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இன்று ரிலீஸான 'இரும்புத்திரை' படத்தில் சமந்தா குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஆனாலும், உளவியல் நிபுணர் டாக்டர். ரதி தேவி எனும் கேரக்டரில் நடித்து அழகான எக்ஸ்பிரஷன்களாலும், சிரிப்பாலும், மெச்சூர்ட் நடிப்பாலும் கவர்ந்திருக்கிறார்.

விஷால் - சமந்தா இடையேயான இரண்டு டூயட் பாடல்களுமே படத்தில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. காதல் காட்சிகளும் படத்தில் இடம்பெறவில்லை. கதையின் ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி கட் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆக, சமந்தாவுக்காகவே 'இரும்புத்திரை' படம் பார்க்கச் செல்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சும். அழகான சமந்தாவை இன்னும் அதிகமான காட்சிகளில் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X