எடிட்டிங் இல்லை...94 நிமிடங்கள் ஒரே ஷாட்...‘இரவின் நிழல்’ திரைப்படம்..ஆர்.பார்த்திபனின் புதிய சாதனை

சென்னை : நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படம் புதுமையான ஒரு முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது.

94 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இரவின் நிழல் திரைப்படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் ஆசியாவிலேயே முதல்முறையாக சிங்கிள் ஷாட் ஆக எடுக்கப்பட்ட படம் எனும் அரிய ரெக்கார்டை படைத்துள்ளது.

பார்த்திபன் புது முயற்சி

பார்த்திபன் புது முயற்சி

இயக்குனர் பார்த்திபன் நடிகர் பார்த்திபனை விட தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை தீவிரமாக செய்து வருபவர். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவர் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் ஒத்த செருப்பு படங்கள் ஒரு நல்ல உதாரணம். ஒத்த செருப்பு திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரே இடத்தில் முழு படத்தையும் எடுத்து முடித்து இருப்பார். ஒரு க்ரைம் திரில்லர் பார்த்த அனுபவம் அது நமக்குள் ஏற்படுத்தியது. ஆஸ்கார் வரை அது சென்று திரும்பியது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் இரவின் நிழல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிங்கிள் ஷாட் மூவி

சிங்கிள் ஷாட் மூவி

இரவின் நிழல் திரைப்படம் ஆசியாவிலேயே நான்லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ள முதல் படமாக வந்துள்ளது. 94 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளனர். இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக ஒரு ஷாட் எடுப்பது என்பதே மிகவும் சிரமமான ஒரு செயல். ஆனால் ஒரு திரைப்படத்தை 200 கலைஞர்களை பயன்படுத்தி பல மாத தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு வெற்றிகரமாக எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த முயற்சி லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் திரையில் ஓடக்கூடிய நேரத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 94 நிமிடங்கள் முப்பத்தி ஆறு நொடிகள் ஓடக்கூடிய இந்த படம் 136228 பிரேம்கள் கொண்டுள்ளது.

பார்த்திபன் - ரஹ்மான் உரையாடல்

பார்த்திபன் - ரஹ்மான் உரையாடல்

நேற்று இரவில் நிழல் படத்தில் முதல் பாடல் ரிலீஸ் செய்த மேடையில் பார்த்திபன் மற்றும் ரகுமான் மத்தியில் நடந்த கேள்வி பதில்கள் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். மிகவும் அமைதியாக காணப்பட்டார் ஏ ஆர் ரஹ்மான். உணர்ச்சி பொங்க காணப்பட்ட பார்த்திபன் தனது மனதில் 20 வருட காலம் தேக்கிவைத்த ஏக்கங்களை ஏ ஆர் ரகுமான் இடம் கேள்விகளாக கேட்டுள்ளார். ஏ ஆர் ரகுமான் அவர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாக பதிலளித்தார். படத்தில் ஏ ஆர் ரகுமான் பங்களிப்பை குறிப்பிட்டு பார்த்திபன் " இந்த படத்தை நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் எடுத்தேன் " என்றும், " இதில் முக்கால் புகழ் உங்களுக்கு சேரும் எனவும் ஏ ஆர் ரஹ்மானை பெருமைப்படுத்தி பேசியுள்ளார்.

Recommended Video

வெறி அதிகமாச்சு | AR Rahman and Parthiban Conversation | Iravin Nizhal
பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

ஆசியாவிலேயே முதல் முறையாக நான்லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ள இரவின் நிழல் படம் ரிலீசுக்கு முன்பே பல சினிமா பிரபலங்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இரவின் நிழல் திரைப்படம் தமிழ் சினிமாவின் லைட்ஹவுஸ் எனப் புகழ்ந்துள்ளார். ஆசிய சினிமாவில் முதல்முறையாக எடிட்டர் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள படம். முதல் முறையாக நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்ட படம். பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் இந்தியாவின் பெருமை. தமிழ் சினிமாவின் லைட் ஹவுஸ் என குறிப்பிட்டுள்ளார். இரவின் நிழல் திரைப்படம் இந்த மாதம் நடைபெறவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X