நிக்ஸனை காப்பாற்றிய மிக்ஜாம்.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் கிடையாதாம்!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகப்படியான மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில், எலிமினேஷ் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி டிசம்பர் 6ம் தேதி வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்னையை தாக்கிய புயலிலும் பிக் பாஸ் வீடு எந்தவொரு சேதாரமும் இன்றி இருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் மட்டும் இல்லை என பிக் பாஸ் டீம் தற்போது போட்டியாளர்களை சந்தோஷப்படுத்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
5 பேர் நாமினேஷன்: இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 5 பேர் மட்டும் நாமினேட் ஆகி உள்ளனர். வழக்கம் போல அர்ச்சனா, விசித்ரா, நிக்சன், மணி மற்றும் தினேஷ் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மாயா, பூர்ணிமா, ரவீனா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எஸ்கேப் ஆகி விட்டனர்.
நிக்சன் தான் டார்கெட்: பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தவர்களையே தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் ரசிகர்கள் எலிமினேட் செய்து வரும் நிலையில், இந்த வார நாமினேஷனில் நிக்சன் சிக்கிய நிலையில், அவரை வெளியேற்ற ரசிகர்கள் முடிவு கட்டி விட்டனர். குறைவான ஓட்டுக்களுடன் நிக்சன் கடைசி இடத்தில் இருந்து வரும் நிலையில், அவர் தான் இந்த வாரம் வீட்டுக்கு கிளம்ப காத்திருந்தார்.
எலிமினேஷன் கிடையாது: ஆனால், சற்றுமுன் இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் அதிகளவு ஓட்டுக்களை போட முடியாமல் போயுள்ளதால், இந்த வாரம் யாரும் எலிமினேஷன் கிடையாது என பிக் பாஸ் டீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிக்சனை காப்பாற்ற விஜய் டிவி சதி என பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அடுத்த வாரம் இதே நாமினேஷனே இருக்க வேண்டும் என்றும் டபுள் எவிக்ஷன் வையுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
3 கோடி பேர் பார்க்கலையா: கமல் எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியை 3 கோடி பேர் பார்க்குறாங்கன்னு சொல்வார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது 4 மாவட்ட மக்கள் தானே, அப்ப மற்ற மாவட்ட மக்கள் யாரும் ஓட்டுப் போடவில்லையா? என்றும் ஏதோ நாங்க ஓட்டுப் போட்டுத் தான் எலிமினேஷன் பண்ற மாதிரி சீன் போடுறீங்களே என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











