twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள 'நோ என்ட்ரி' திகில் படம்!

    |

    சென்னை : உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

    இப்படத்திற்கு 'நோ என்ட்ரி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே 'நீயா2' திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார். மேலும், இப்படத்தை ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

    No Entry Horror Movie!

    படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, "மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள் .அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் கதைதான் 'நோ என்ட்ரி' படம், என்கிறார்.

    பேண்டை கழட்டி ... ஓவர் அட்ராசிட்டி செய்யும் பிரபல ஹிந்தி நடிகை !பேண்டை கழட்டி ... ஓவர் அட்ராசிட்டி செய்யும் பிரபல ஹிந்தி நடிகை !

    இப்படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் தைரியசாலியாக நாய்களுடன் போராடும் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ் , ஆதவ் கண்ணதாசன்,டில்லி, கோகுல் 'மானாட மயிலாட' புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

    No Entry Horror Movie!

    இப்படத்திற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழ் சினிமா காணாத ஆபத்தான மலைப்பிரதேசக் காட்சிகளையும் பசுமைக் காட்டு வெளிகளையும் நான் இது தொடர்பான காட்சிகளையும் சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முகாமிட்டுப் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.
    படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி. இசை -அஜிஸ், பாடல்கள் கு.கார்த்திக், எடிட்டிங் பிரதீப்Eராகவ்,நடனம்- மானஸ், சண்டைக்காட்சிகள் .ஜி.என். முருகன், வசனம் -செந்தில்குமார், கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர். அழகு கார்த்திக் . படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு உருவாகி வருகின்றன.படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    English summary
    'No Entry' Horror Movie!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X