twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மார்ச் 16 முதல் நோ ஷூட்டிங்!- தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

    By Shankar
    |

    சென்னை: வரும் மார்ச் 16-ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடக்காது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு எப் ஓ உள்ளிட்ட அமைப்புகள் விதிக்கும் கட்டணங்களைக் குறைக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. புதிய படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது.

    No film shootings from March 16

    இதன் ஒரு பகுதியாக திரையரங்க உரிமையாளர்களும் வரும் 16-ம் தேதியிலிருந்து திரையரங்குகளை மூடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த சூழலிலும் இணக்கமான ஒரு நிலை எட்டப்படாததால், டிஜிட்டல் சேவை வழங்குவோருக்கு எதிராக, எந்தப் பட ஷூட்டிங்கும் நடக்காது என அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

    ஏற்கெனவே, சினிமா தொடர்பான இசை வெளியீட்டு விழாக்கள், புதுப்பட பூஜைகள், பிரஸ் மீட்டுகள் எதுவுமே நடக்கக் கூடாது என தடை அமலில் உள்ள நிலையில், படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Tamil Film Producers Council has ordered to stop film shootings from March 16th
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X