அது ஏன் என்னை பார்த்தால் மட்டும் அப்படி தோன்றுகிறது: அனுஷ்கா கோபம்

By Siva

ஹைதராபாத்: அது ஏன் என்னை பார்த்தால் மட்டும் அப்படி தோன்றுகிறது என்று அனுஷ்கா அலுத்துக் கொண்டுள்ளார்.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் ரிலீஸானது. வயது ஏறிக் கொண்டே செல்வதால் திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தி வருவதால் சம்மதம் தெரிவித்தார்.

திருமணமத்திற்காக கோவில் கோவிலாக சென்று வருவதால் புதுப் படங்களில் நடிக்க கதை கேட்காமல் இருந்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா தற்போது மீண்டும் கதை கேட்கத் துவங்கிவிட்டார். அப்படி என்றால் அவருக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டதா, இல்லை திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாரா என்று தெரியவில்லையே என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அனுஷ்கா மீண்டும் கதை கேட்கத் துவங்கியதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.

பேய்

பேய்

அனுஷ்காவை தேடி பேய் படக் கதைகளாக வருகிறதாம். சும்மா, சும்மா பேயாக நடிக்க முடியாது. சில காலம் பேய் கதையில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால் பேய் படங்களை இயக்குவோர் என்னை தேடி வர வேண்டாம் என்கிறாராம் அனுஷ்கா. மாறுபட்ட கதைகளில் நடிக்க விரும்புகிறார் அவர்.

பிரபாஸ்

பிரபாஸ்

அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் இருவரின் ரசிகர்களின் விருப்பம். ஆனால் இருவரும் இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அனுஷ்காவும், பிரபாஸும் பாலிவுட் படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. கரண் ஜோஹார் இயக்கும் அந்த படத்தில் ரன்வீர் சிங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாகுபலி படங்கள் மூலம் அனுஷ்கா இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதனால் கதை கேட்கும்போது அது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். அனுஷ்காவின் திருமணம் பற்றி தெரியாமல் உள்ள நிலையில் பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X