சாவித்திரியை அடுத்து ஜெ.வாக நடிக்கிறேனா..? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்கவில்லை என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் இவர் நடித்த நடிகையர் திலகம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "நடிகையர் திலகம் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. கமல் அழைத்து வாழ்த்து தெரிவித்தது பெருமிதமாக உள்ளது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்கு எண்ணம் இல்லை. இனிவரும் காலங்களில் வாழ்க்கை வரலாறு தழுவிய படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











