தளபதி 68ல் இருந்து ஒதுங்கிய ஜோதிகா? அந்த முன்னாள் ’ஜோடி’யுடன் பேச்சுவார்த்தை நடக்குதாம்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். லியோ படம் வெளியான பின்னர் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் ஜோடி போட்டு வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஜோதிகா தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் சினிமா உலகில் திடீரென பரவியது.

No Jyothika, Now Thalapathy 68 team approached Simran for Vijays pair?

நடிகர் விஜய் இந்த படத்தில் அப்பா, மகன் என டபுள் ஆக்‌ஷனில் நடிக்க உள்ள நிலையில், அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என பேச்சுக்கள் அடிபட்டன.

ஜோதிகா நடிக்கவில்லையாம்: இயக்குநர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் நடிக்க வைக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால், இறுதியில் நடிகர் விஜய்யுடன் நடிக்க சில காரணங்களால் ஜோதிகா மறுத்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

சந்திரமுகி 2வில் மிஸ் ஆனது போல தளபதி 68 படத்திலும் ஜோதிகாவை ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள் என்பது கன்ஃபார்ம். இந்நிலையில், இன்னொரு பிரபல முன்னாள் ஜோடியுடன் பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 68ல் சிம்ரன்: ரஜினிகாந்த் உடன் பேட்ட, விக்ரம் உடன் மகான், மாதவன் உடன் ராக்கெட்ரி: நம்பி விளைவு என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் சீனியர் நடிகை ரோலில் ஜோடி போட்டு நடித்து வரும் சிம்ரனை தற்போது தளபதி 68 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

No Jyothika, Now Thalapathy 68 team approached Simran for Vijays pair?

ஜோதிகாவை விட ஜோடி பட நடிகை சிம்ரன் விஜய்க்கு சரியான பொருத்தமாக இருப்பார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்துக்காக த்ரிஷாவுடன் விஜய் இணைந்த நிலையில், தற்போது பல ஆண்டுகள் கழித்து விஜய் - சிம்ரன் இணைந்தாலே அது ரசிகர்களுக்கு திரையில் பெரிய ட்ரீட்டாகவே இருக்கும் என்கின்றனர்.

எத்தனை பிளாக்பஸ்டர்: ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா கடைசியாக யூத் படத்தில் "ஆல் தோட்ட பூபதி" பாடல் என இவர்கள் இருவரது காம்போவே ரசிகர்களை குஷியாக்கி விடும்.

தளபதி 68 படத்துக்கான புதிய லுக் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய், வெங்கட் பிரபு குழு சீக்கிரமே தளபதி 68 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்களை வெளியிடும் என தெரிகிறது. இன்னொரு ஹீரோயின் இப்போ வரைக்கும் பிரியங்கா மோகன் தான் எனக்கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X