Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அப்போ வனிதா சொன்னது.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எந்த நோட்டீஸும் வரலையாம்.. கஸ்தூரி சொல்றாங்க!
சென்னை: வனிதா விஜயகுமா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி இவங்க சண்டை எப்போது தான் முடியப் போகுதுன்னே தெரியல..
Recommended Video
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு கோடியே 25 லட்சம் கேட்டு வனிதா விஜயகுமாருக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,
அதற்கு பதிலடி கொடுத்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் ஒரு வக்கீல் நோட்டீஸ் ஸ்க்ரீன் ஷாட்டை நேற்று எடுத்து போட்டிருந்தார்.

மான நஷ்ட வழக்கு
பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் நேருக்கு நேர் வனிதா விஜயகுமாரும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் மோதிக் கொண்ட வீடியோ தமிழகத்தில் பரப்ரப்பை கிளப்பியது. அந்த வீடியோவில் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நடிகை வனிதா தரக்குறைவாக பேசியதாக, அவர் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

வனிதா விஜயகுமார் புலம்பல்
அந்த வக்கீல் நோட்டீஸின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை போட்டு, நடிகை வனிதா விஜயகுமார், சமூக சேவகி என்ற போர்வையில், சமரசம் பேச வந்து, தற்போது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார் அந்த ஃபேக் ஜட்ஜ் என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொடுத்த வழக்கு குறித்து வனிதா புலம்பி தள்ளினார்.

நானும் அனுப்பிட்டேன்
இந்நிலையில், நேற்று, லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவருக்கு எனது வக்கீல்கள் மூலம் நானும் நோட்டீஸ் அனுப்பிட்டேன் என ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டு இருந்தார். அதில், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகள் பொய் என்றும் அப்படி ஒன்றும் தனது கட்சிக்காரர் பேசவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நோட்டீஸ் வந்துச்சா
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம், வனிதா விஜயகுமார் சொன்ன மாதிரி உங்களுக்கு ஏதாவது வக்கீல் நோட்டீஸ் வந்துச்சா.. இப்படித்தான், என் மேல வழக்கு போட்டிருக்கேன்னு முதல்ல சொன்னாரு.. ஆனால், எதுவுமே போடல.. என ட்வீட் போட்டு கேட்டு இருந்தார்.

ஏன் இந்த பப்ளிசிட்டி
இதை ஏன் நீங்க அவங்களுக்கு போன் பண்ணியோ, தனிப்பட்ட முறையிலயோ கேட்கக் கூடாது ஏன் இந்த பப்ளிசிட்டி என சில வனிதா ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் கேட்டு வந்த நிலையில், வனிதா வெளியிட்ட போது மட்டும் ஏன் கேட்கல என கஸ்தூரி ரசிகர்களும் எதிர் கேள்வி கேட்டு பிரச்சனையை காரசாரமாக்கினர்.

எதுமே வரலையாம்
உடனடியாக மீண்டும் ஒரு ட்வீட் போட்ட கஸ்தூரி, ட்விட்டரில் எழுப்பிய பிரச்சனைக்கு ட்விட்டரில் தான் கேள்வி கேட்க முடியும் என்றும், மேலும், வனிதா விஜயகுமாரிடம் இருந்து தனக்கு எந்தவொரு நோட்டீஸும் வரவில்லை என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் சொல்லிட்டாங்க.. என நடிகை கஸ்தூரி பதில் போட்டுள்ளார்.