யோவ் யாருய்யா அது.. என் காதலன்.. சொல்லுங்கப்பா ப்ளீஸ்.. கலாய்க்கும் ஐஸ்வர்யா!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வித்தியாசமான நடிகை. கவர்ச்சியை சற்றும் கண்டு கொள்ளாமல், அழகான நடிப்பால் நம் மனங்களில் அம்சமாக வந்தமர்பவர்.
காதல், கிசுகிசு என எதிலும் சிக்கிக் கொள்ளாமல் வலம் வருபவர் ஐஸ்வர்யா. ஆனால் விடுவார்களா குசும்பர்கள். அவரையும் வம்பிக்கிழுக்க ஆரம்பித்து விட்டனர்.
ஐஸ்வர்யாவுக்கும், அவருக்கும் காதல்.. இதுதான் கோலிவுட்டை சூடாக வலம் வரும் வதந்தி. இது ஐஸ்வர்யா காதுக்கும் போனது. எதையுமே ஈஸியாக எடுத்துக் கொள்பவர் ஐஸ்வர்யா. இதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டார்.

கலாய்க்கும் ஐஸ்வர்யா
ஜாலியாக எடுத்துக் கொண்டதோடு நில்லாமல் அந்த காதலன் யாருன்னு எனக்கும் சொல்லுங்கப்பா என்றும் கலாய்த்துள்ளார் கிசுகிசு கிளப்பியுள்ளவர்களை. இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார்.
காதல் கதை
அந்த டிவீட்டில், எனது காதல் கதை குறித்து நிறைய ரூமர்கள் வருகின்றன. நானும் அதை கேள்விப்பட்டேன். தயவு செய்து அந்த காதலன் யாருன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பா. நானும் தெரிஞ்சுக்கறேன்.

எல்லாம் பொய்
பொய்யான செய்திகளை எதுக்கு பரப்பறீங்க. எனக்கு ஏதாவது இதுபோல ஆச்சுன்னா முதலில் உங்க கிட்டதான் வந்து சொல்லப் போறேன். இப்போதைக்கு நான் ஹேப்பியான சிங்கிள்தான். எல்லோரும் ஜாலியா இருங்க என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

டம்மி ரூமர்
அடடா, யாருப்பா அந்த காதலன்.. எனக்கு பார்க்கனும் போல இருக்கேன்னு ஐஸ்வர்யாவே வந்து கலாய்த்து விட்டுப் போகும் அளவுக்கு டம்மியான ரூமர்களை கிளப்புவது யாரப்பா.. வேற வேலை இருந்தா பாருங்கப்பா.. !


Click it and Unblock the Notifications











