மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ரொம்ப வருத்தம்ப்பா.. கல்கி பட இயக்குநர் இப்பவே அப்படி சொல்லிருக்கக் கூடாது?
ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமௌலி, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத இறுதியில் வெளியான கல்கி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ், ஸ்ருதிஹாசன் நடித்த சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ஒரே வாரத்தில் அந்த வசூலை கல்கி திரைப்படம் முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்த வார இறுதிக்குள் கல்கி 2898 ஏடி திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பாகத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தை முகத்தை காட்டாமல் சில்லவுட்டிலேயே காட்டி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருந்தார் நாக் அஸ்வின். தெலுங்கில் அதற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்தார். சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் அந்த காட்சியில் நடித்திருந்தார்.
ஏகப்பட்ட கேமியோக்கள்: கல்கி திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற ஏகப்பட்ட கேமியோக்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கேமியோக்களை சரியாக பயன்படுத்தாமல் சும்மா போகிற போக்கில் ஒரு பிரபலம் வந்து செல்வது போல நாக் அஸ்வின் காட்டி விட்டார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. குறிப்பாக துல்கர் சல்மான் கேமியோ சரியாக அமைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பைரவாவை எடுத்து வளர்க்கும் அவர் தான் பரசுராமரா? அல்லது அதிரதனா? என்கிற கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் விளக்கம் கிடைக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கிருஷ்ணராக மகேஷ் பாபு: கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணரின் முகத்தை காட்டாத நிலையில், நானி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நல்லா இருக்கும் என்றும் மகேஷ் பாபு அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நாக் அஸ்வின் எப்படியாவது பேசி மகேஷ் பாபுவையே நடிக்க வைங்க என டோலிவுட் ரசிகர்கள் நெருக்கடி கொடுக்க, அதிரடியாக நாக் அஸ்வின் ஒரு விஷயத்தை இப்பவே சொல்லி விட்டார்.
அதுக்கு வாய்ப்பில்லை பாஸ்: இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் நாக் அஸ்வின் கடைசி வரை கடவுள் விஷ்ணுவை கண்ணிலேயே காட்டப் போவதில்லை என பதில் அளித்து விட்டார். அந்த கதாபாத்திரத்தை சில்லவுட்டில் தான் கொண்டு செல்வேன் என்றும் கூறியுள்ளார். கல்கியாகவும் யாரையும் அப்போது நாக் அஸ்வின் காட்டாமல் கடைசி வரை கர்ணன் பிரபாஸ் கல்கி காப்பாற்றுவதைத்தான் காட்டுவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











